பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது !! குடியரசுத் தலைவர் அறிவிப்பு !!

Published : Jan 25, 2019, 08:46 PM IST
பிரணாப் முகர்ஜிக்கு  பாரத ரத்னா விருது !!  குடியரசுத் தலைவர் அறிவிப்பு  !!

சுருக்கம்

முன்னாள் குடியரசுத் தலைவர்  பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணப் குமார் முகர்ஜி, 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக கடந்த 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் அரசியல்வாதியான பிரணப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.

குடியரசுத் தலைவர் பதவி முடிந்த பிறகு பாஜகவுடன் நெருக்கம் காட்டியதாக அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். மறைந்த  சமூக சேவகர் நானா தேஷ்முக் மற்றும் கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரு அரசன் வருவான்..! கிறிஸ்துமஸ் விழாவில் கடவுள் நம்பிக்கை..! திமுகவால் சுதாரித்த விஜய்..!
திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!