அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி.. அதிமுகவினரையும் கவர்ந்த ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published May 22, 2021, 10:31 AM IST
Highlights

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.  

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்கியுள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் அரசு பங்களாக்களை காலி செய்துள்ள நிலையில் எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசு இந்த சலுகை வழங்கி உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  ஸ்டாலின் தலைமையிலான இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு சென்னையில் உள்ள அரசு பங்களாக்களை ஒதுக்கீடு செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  அந்தவகையில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2011-ம் ஆண்டு முதல் தங்கியிருக்கும் பங்களாவில் தான் தொடர்ந்து தங்க அனுமதிக்க வேண்டும் என அவர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதை உடனே பரிசீலித்த தமிழக அரசு கிரின்வேஸ்  சாலையில பொதுப்பணித்துறை கட்டிடத்திற்கு கீழ் உள்ள பங்களாவில் எடப்பாடி பழனிச்சாமி தங்க அனுமதி அளித்துள்ளது. அதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்களாவை காலி செய்ய அவகாசம் கோரியுள்ளார், அதே நேரத்தில் பல அமைச்சர்கள் தங்களது பங்களாவை காலி செய்துள்ளனர். இந்நிலையில் அதை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசு பங்களா ஒதுக்கப்பட்டு இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. " இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் " எனபது போல முதல்வர் ஸ்டாலின் எடப்பாடிக்கு குடியிருப்பில் தங்க அனுமதி அளித்துள்ளார் என திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டும் அதை எடப்பாடி மறுதலித்தார் அனால் அவருக்க இப்போது அரசு பங்களாவில் தங்க ஸ்டாலின் அனுமதி அளித்து பெருந்தன்மையுடன் நடந்துகொண்டுள்ளார் என பாராட்டி வருகின்றனர். 

 

click me!