#BREAKING அடக்கடவுளே... நுரையீரல் தொற்று... ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு..!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 11, 2021, 9:35 AM IST
Highlights

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாதவராவ் என்ற வேட்பாளர் போட்டியிட்டார். பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே, அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. 

இதனையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாதவராவ் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக அவரது மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!