நான் ஆமைக்கறி தின்னேன், பூனைக்கறி சாப்பிட்டேன் என்று கூறி தமிழனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் என்று இலங்கை எம்பி பேசியிருக்கும் வீடியோ நாம் தமிழர் தம்பிகளை கொதிப்படைய வைத்து உள்ளது.
நான் ஆமைக்கறி தின்னேன், பூனைக்கறி சாப்பிட்டேன் என்று கூறி தமிழனத்தை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் என்று இலங்கை எம்பி பேசியிருக்கும் வீடியோ நாம் தமிழர் தம்பிகளை கொதிப்படைய வைத்து உள்ளது.
அரசியல் பாதையில் தமக்கென ஒரு பாதையை வைத்துக் கொண்டு சென்று கொண்டு இருப்பவர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்… தமிழகம் முழுக்க மேடைகளிலும் சரி, பேட்டிகளிலும் சரி இவரது பேச்சுகள் சுவாரசியமாக இருக்கும்.
மேடைக்கு மேடை திமுகவையும், பாஜகவையும் சகட்டு மேனிக்கு பேசி பொறி கிளப்பும் இவரது பேச்சில் ஈழம் பற்றியும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் குறிப்பிடாமல் இருந்ததே கிடையாது.
அண்ணன் பிரபாகரனுடன் ஆமைக்கறி தின்னேன்… அண்ணி மதிவதினி இட்லியும், மட்டன் குழம்பும் தந்தாங்க… இலங்கையில் போய் போர் பயிற்சி தெரிஞ்சுக்கிட்டு வந்தேன் என்று பேசி தள்ளும் விஷயங்களில் உண்மை இருக்கிறதோ இல்லையோ சுவாரசியம் இருக்கும்.
இணைய உலகில் இவரது பேச்சுகள், பேட்டிகளுக்கு என்று எப்போதும் தனி மவுசு உண்டு. மீம்சுகளுக்கு கண்டென்ட் வேண்டும் என்றால் இவரது பேச்சோ, பேட்டியோ கேட்டால் போதும்… மாஸ் ஆக ஏதேனும் ஒரு சப்ஜெக்ட் கிடைத்துவிடும் என்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
விடுதலைப்புலிகள் பற்றியும், அதன் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவர் பேசாத மேடைகளே இல்லை எனலாம். போகும் இடங்களில் எல்லாம் தமது அனுபவங்கள் என்று கூறி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருந்தவன் என்று சில சம்பவங்களை பட்டியலிடுவார். ஆனால் இவரது பேச்சுகள் அனைத்தும் பொய் என்று ஒரு தரப்பினர் இன்னமும் கருத்து கூறி வருகின்றனர்.
இப்போது தமிழகம் முழுவதும் பரவலாக சர்ச்சையாகி இருக்கும் ஜெய்பீம் படம் பற்றியும் கருத்து கூறிய சீமான், பாமகவின் குரு சாதி சங்கத்தை சேர்ந்தவர், அவர் அப்படித்தான் பேசுவார் என்று போட்டு தாக்கினார். அவரது பேட்டியை வழக்கம் போல் திமுக உ.பி.க்கள் வம்பளக்க.. நாம் தமிழர் தம்பிகள் வைரலாக்கி வருகின்றனர்.
ஆனால் ஜெய்பீம் படம் பற்றி சீமானின் கருத்தை விட, பேட்டியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு வீடியோ இணையத்தில் எக்கச்செக்கமாக வைரலாகி வருகிறது. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டென்ட் ஆகவும் மாறி இருக்கிறது.
இந் நிலையில் சீமான் பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கிண்டலடித்து பேசி உள்ளார். அந்த வீடியோ இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கட்சியின் வன்னி மாவட்ட எம்பி திலீபன் என்பவர் உரையாற்றினார். அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அந்நாட்டு அரசியல் மட்டும் பேசாமல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றியும் ஒரு குற்றச்சாட்டையும் முன் வைத்து உள்ளார்.
அவர் பேசியதாவது: ஆமைக்கறி தின்னேன், பூனைக்கறி தின்னேன் என்று தமிழகத்தில் சீமான் கதை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்.
அவரை (சீமான்) போல இங்கு தமிழ் மக்களின் துன்பத்தை வைத்து சுமந்திரன் பிழைப்பு நடத்தி வருகிறார். சுமந்திரனை இலங்கையின் சீமான் அல்லது தமிழர்களின் சீமான் என்று தான் கூற வேண்டும். வன்னியில் சடலங்களின் மீதான நகைகளை திருடியவர் எம்பி சுமந்திரன் என்று போட்டு தாக்கி உள்ளார்.
அவரின் இந்த கதை சொல்லி சீமான் என்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. நாம் தமிழர் தம்பிகளின் பி.பி.யையும் எகிற வைத்து உள்ளது.
ஈழத்தமிழர்களுக்காகவே தாம் இருப்பது போலவும், தமிழனத்தை பற்றியும் நரம்பு புடைக்க பேசும் சீமானும் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்று கேள்விகளுடன் டுவிட்டரில் வலம் வர ஆரம்பித்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்..!!
விளைந்த நெல் வயலுக்குள் மாட்டை இறக்கி நாசமாக்கும் வேலையை செய்கிறார்!!
ஈழ பகுதியின் மக்கள் பிரதிநிதி இலங்கை பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு!! pic.twitter.com/CheMT7WbaA