ஆபாச சிடி… மறந்துட்டீங்களா…? முன்னாள் முதல்வரை டர்ராக்கிய பிரபல நடிகை… வைரல் வீடியோ

Published : Nov 20, 2021, 08:09 AM IST
ஆபாச சிடி… மறந்துட்டீங்களா…? முன்னாள் முதல்வரை டர்ராக்கிய பிரபல நடிகை… வைரல் வீடியோ

சுருக்கம்

சட்டசபையில் சிடி ஒன்றை காட்டி இது ரோஜா நடித்த ப்ளூ பிலிம் சிடி என்று கூறினீர்களே? நினைவிருக்கிறதா என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போட்டு தாக்கி இருக்கிறார் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா.

சட்டசபையில் சிடி ஒன்றை காட்டி இது ரோஜா நடித்த ப்ளூ பிலிம் சிடி என்று கூறினீர்களே? நினைவிருக்கிறதா என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போட்டு தாக்கி இருக்கிறார் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா.

2019ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான தருணம். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்தது தெலுங்கு தேசம் ஆட்சியை இழந்தது.

முதலமைச்சர் பதவியில் இருந்து சந்திரபாபு நாயுடுவை மக்கள் அகற்றிய காலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் கிராப்(graph) ஏறுமுகமாகவே இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரசை மக்கள் அங்கீகரித்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தை கைவிட்டனர்.

சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி குப்பத்தில் தெலுங்குதேசம் மண்ணை கவ்வியது. தற்போது ஆந்திராவில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது அவையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒய்எஸ்ஆர் ஆட்சியை கடும் சொற்களால் விமர்சித்தார்.

அவரை பேச்சால் பொங்கி எழுந்த ஆளும்கட்சி எம்எல்ஏக்கள், நாயுடுவையும், அவரது கட்சியையும் கடுமையான வார்த்தைகளினால் விமர்சித்து தள்ளினர். அவையில் காரசாரமான வாதம் நடைபெற்றது.

தமது அரசியல் பாதை தொடர்ந்து இறங்குமுகமாக இருக்கும் நிலையில் சட்டசபை கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஒய்எஸ்ஆர் கட்சியினர் தம் மீது தொடர்ந்து அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எனது அரசியல்வாழ்க்கையில் இப்படி ஒரு அவமானத்தை நான் சந்தித்ததே கிடையாது. அரசியலில் அங்கமான குற்றச்சாட்டுகள் மீதான எல்லையை நான் ஒருபோதும் தாண்டியது கிடையாது. ஆட்சியை பிடித்து சட்டசபையில் நான் முதல்வராக தான் உள்ளே நுழைவேன் என்றார்.

பின்னர் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய போது, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவதூறாக பேசி வருகின்றனர். என்னளவு இருந்தால் மட்டும் பரவாயில்லை, என் மனைவியை பற்றியும் தாறுமாறாக பேசுகின்றனர் என்று கண்ணீர் விட்டு அழுதார்.

அவரது இந்த வீடியோ ஒரு பக்கம் வைரலாக, அதை மிஞ்சும் வகையில் பிரபல நடிகையும், ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏவுமான ரோஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது: சட்டசபையில் பலமுறை என்னை பற்றி தப்பாக பேசினீர்களே? நான் ஆபாச படத்தில் நடித்தவள் என்று கூறி சிடி ஒன்றை சட்டசபை கூட்டத்தொடரில் எடுத்து வந்தீர்களே? அப்போது அநாகரிகமாக தெரியவில்லையா…?

உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா..? உங்கள் வீட்டில் மட்டும் தான் பெண்கள் உள்ளனரா? எங்களின் வீட்டில் யாரும் பெண்களே கிடையாதா…?

உங்கள் பேச்சு எனக்கு இப்போது ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. இனிமேல் உங்களால் அரசியலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழையவே முடியாது என்று போட்டு தாக்கி உள்ளார்.

ஆந்திர அரசியலில் முன்னாள் முதல்வர் ஒரு பக்கம் அழ… அவருக்கு எதிராக ஆளுங்கட்சியனர் இடைவிடாது விமர்சனங்களையும், கண்டனங்களையும் வைத்து வருகின்றனர்.தொடரும் இத்தகைய விமர்சனங்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல என்பது தான் அங்குள்ள அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது…!

"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu Chief Minister Vijay: கொண்டாட்டத்தில் தமிழ்நாடு..! ராகுல், முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
MK Stalin: வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றியை கூட சொல்லாத காங்கிரஸ்..! ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்..