இலங்கை சென்ற செங்கோட்டையனுக்கு அதீத வரவேற்பு... பள்ளிக்கல்வித்துறையில் கலக்குவதாக பாராட்டு!

Published : Sep 17, 2018, 08:47 AM ISTUpdated : Sep 19, 2018, 09:27 AM IST
இலங்கை சென்ற செங்கோட்டையனுக்கு அதீத வரவேற்பு... பள்ளிக்கல்வித்துறையில் கலக்குவதாக பாராட்டு!

சுருக்கம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.-ன் 102-வது பிறந்த நாள் விழா, இலங்கையில் உள்ள அவரின் சொந்த ஊரான கண்டியில் நடைபெற்றது. அங்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.-ன் 102-வது பிறந்த நாள் விழா, இலங்கையில் உள்ள அவரின் சொந்த ஊரான கண்டியில் நடைபெற்றது. அங்கு சென்ற அமைச்சர் செங்கோட்டையனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு பள்ளி கல்வி முறையில் சிறப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு அதிரடியான மாற்றங்களை செங்கோட்டையன் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் கலக்குவதாக இலங்கை மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

அதை தொடர்ந்து, இதயக்கனி நாளிதழ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இந்த நிகழ்சியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இலங்கை அமைச்சர்கள் பங்கேற்றனர். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன் எம்.ஜி.ஆர் பிறந்த ஊரில் தான் காலடி எடுத்து வைத்தது பெருமையாக உள்ளது என்றார். இதற்கு வாய்ப்பளித்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். 

தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்யாவுடன் ஆலோசித்ததாகவும் கூறினார். மேலும் சென்னை வரும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்துப் பேசும் போது, மீனவர் பிரச்சனைக்கு சமூக தீர்வு எட்டுப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!