ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கும் இலங்கை மக்கள்.. சங்பரிவார்களுக்கு ஒரு எச்சரிக்கை.. திருமாவளவன் திகுதிகு.!

By Asianet Tamil  |  First Published Jul 10, 2022, 9:11 PM IST

இலங்கை விவகாரம் சங்பரிவார்களுக்கும் ஓர் எச்சரிக்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கை மீறியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேலும், தலைநகர் கொழும்புவில் ராணுவம் மற்றும் காவல்துறை உஷார் நிலையில் இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.அந்நாட்டின் மதத் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர், சிவில் உரிமை ஆர்வலர்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகியோர் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகிய இருவரும் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கை மீறியும் இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

குறிப்பாக, அந்நாட்டின் அதிபர் மாளிகை முன் திரண்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.  காவல்துறையை மீறி அதிபர் மாளிகைக்குள் இவர்கள் நுழைய முயற்சி செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறை கண்ணீர் புகைக்குண்டு வீச்சு போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த முயற்சித்தனர். பாதுகாப்பை மீறியும் அதிபர் மாளிகைக்குள்  போராட்டக்காரர்கள் நுழைந்ததால், அதிபர் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் சிங்கள மக்களால் வீழ்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய கருத்தை சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில், “ஒரே இனம் ஒரே மதம் 
ஒரே கலாச்சாரம் ஒரேதேசம்  எனும்
இனவாதம் இனவெறுப்பாகி இனவெறுப்பு இனவெறியாகி இனவெறி இனக்கொலையாகி
இனக்கொலை  ஃபாசிசமாகி
ஃபாசிசம் புறப்பட்ட புள்ளிக்கே 
பூகம்பமாகத் திரும்பி
சிங்கள பௌத்த பேரினவாத
ஃபாசிஸ்டுகளை விரட்டியடிக்கிறது.
சங்பரிவார்களுக்கும் 
இது ஒரு எச்சரிக்கை.” என்று திருமாவவன் பதிவிட்டுள்ளார்.

click me!