பேரா.கல்யாணசுந்தரத்திற்கு செய்தி தொடர்பாளர் பொறுப்பு.. அதிமுக அதிரடி அறிவிப்பு.. கலங்கும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2021, 10:40 AM IST
Highlights

இதனால் நாம் தமிழர் கட்சியில் மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டது எனவும் தகவல் வெளியானது. அதையடுத்து பேராசிரியர் கல்யாணசுந்தரம்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.  

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த பேராசிரியர் கல்யாண சுந்தரத்திற்கு செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தொலைக்காட்சி மற்றும் இன்னபிற சமூக தொடர்பு ஊடகங்களில் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர் பேராசிரியர் கல்யாணசுந்தரம். கடந்த  ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சியில் இருந்து விலகினார். அவருடன் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியும் கட்சியிலிருந்து விலகினார்.

 

இதனால் நாம் தமிழர் கட்சியில் மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டது எனவும் தகவல் வெளியானது. அதையடுத்து பேராசிரியர் கல்யாணசுந்தரம்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். ஒட்டுமொத்த  தமிழர்களின் நலனுக்காக செயல்பட கூடிய ஒரே கட்சி அதிமுக தான் என்றும் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என அவர் உறுதி கூறியிருந்தார்.  டெல்லி சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நல்ல பேச்சுத்திறமையும், நாவன்மையும் கொண்ட பேராசியிரயர் கல்யாணசுந்தரத்தை அதிமுக வரும் சட்ட மன்ற தேர்தலில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அவருக்கு அதிமுகவில் செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஊடக விவாதங்களில் பேராசிரியர் கல்யாண சுந்தரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக  அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூக தொடர்பு ஊடகங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களும் இன்று முதல் இணைத்துக் கொள்ளப்படுகிறார். தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  

 

click me!