ஆன்மீகவாதி ரஜினி அரசியலை சந்திப்பாரா...? - ராஜ்பகதூர் “நச்” பேட்டி

Asianet News Tamil  
Published : May 21, 2017, 06:30 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
ஆன்மீகவாதி ரஜினி அரசியலை சந்திப்பாரா...? - ராஜ்பகதூர் “நச்” பேட்டி

சுருக்கம்

Spiritual Rajini will meet politics

ஆன்மீகவாதியான ரஜினி, அரசியலுக்கு வந்தால் மாறிவிடுவாரா என கேட்தற்கு, அவர் நிச்சயம் மாறிவிடுவார் என அவரது உயிர் நண்பர் ராஜ்பகதூர் பேட்டியளித்தார்.

படத்துக்கு படம் முடிந்தவுடன் ரஜினி, இமயமலை சென்று வருவது வழக்கம். காரணம் அவர் பாபாவின் சிஷ்யன். இதனால், பாபாவின் ஆசிர்வாதம் பெற்று கொண்டு மீண்டும் வருவார்.

அவர் கையில் எந்நேரமும் ஒரு முத்திரை இருக்கும். அதை பாஜகவினர், தவறாக புரிந்து கொண்டு, தங்களுக்கு ரஜினி ஆதரவு தருகிறார் என கூறுகின்றனர். அந்த முத்திரை பாபாவின் முத்திரை. அதையே பாஜகவினரும் பயன்படுத்துகின்றனர்.

ரஜினியின் கடைசி படம் ‘2.0’ என கூறுகிறார்கள். அவர் அரசியலுக்கு வந்தால், சினிமாவில் நடக்க கூடாது என எந்த சட்டமும் இல்லை. அவருக்கே விருப்பம் இருந்தால், நடிப்பார். அதே நேரத்தில் ரஜினி, முழுநேர அரசியலுக்கு வந்துவிட்டால், இமயமலைக்கு செல்வதையும் நிறுத்திவிடுவார்.

நானும், ‘படையப்பா’ படத்தில் அரசியல்வாதியாக ஒரு காட்சியில் வருவேன். அப்போதுகூட “எப்போது அரசியலுக்கு வருவீங்க... பார்ட்டி எப்ப ஆரம்பிப்பீங்க...” என்று வசனம் பேசுவேன். அதை நிஜத்தில் ரஜினி அறிவிப்பார். புதிய கட்சியை தொடங்குவார்.

ரஜினி ஆரம்பிக்கும் கட்சி, தற்போதுள்ள அரசியல் கட்சிகள் போல் இல்லாமல், தனி கட்சியாக இருக்கும். இதில் அவரது குடும்பத்தினர் யாரும் தலையிட முடியாது. யாருக்கும் எந்த பதவியும் வழங்க மாட்டார். மக்களுக்காகவே அவர் பாடுபடுவார்.

தற்போது ரசிகர்களை அவர் சந்தித்து வருவது, பல ஆண்டுகளாக ரஜினி, யாரிடமும் தொடர்பு இல்லாமல் இருந்தார். இதனால், அவரது ரசிகர்கள் விரக்தியில் இருந்தனர். தற்போது, அவர்களின் விரக்தியை போக்க அவர் சந்திக்கிறார்.

அரசியலுக்கும், இந்த சந்திப்புக்கும் எந்த உள்நோக்கமும் கிடையாது. ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதற்கான அனைத்து வேலைகளும் தொடங்கிவிட்ட.ன.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் பிளவு? முதல் ஆளாக தாவெக-வுக்கு ஓடும் சிபிஎம்! அதிரடி பின்னணி!
விஜய் கூட்டணிக்கு வேண்டாம்..! டெல்லியின் கணக்கை தவிடுபொடியாக்கும் எடப்பாடி..! அதிமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!