ஜெயா டிவியில் ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு... 'சோறு எப்படி இறங்குது ?'

By Thiraviaraj RMFirst Published Dec 24, 2020, 12:24 PM IST
Highlights

ஜெயா டிவியில் ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சை ஒளிபரப்பியது அம்மாவின் விசுவாசிகளை கொதிப்படையச் செய்துள்ளது.  
 

ஜெயா டிவி யில் ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சை ஒளிபரப்பியது தான் கேவலம், இதுக்கு விவேக் ஜெயராமன் துணை போனது அதை விட கேவலம், உங்களுக்கெல்லாம் சோறு எப்படி இறங்குது ? என அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெயா டிவியில் ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சை ஒளிபரப்பியது அம்மாவின் விசுவாசிகளை கொதிப்படையச் செய்துள்ளது.  சமீபத்தில் பேசிய சீமான் ’’பரப்புரையில் எம்.ஜி.ஆர் குறித்து பேசினால் அதிமுகவின் இரட்டை இலைக்குதான் ஓட்டு போடுவார்கள். ரஜினியும், கமலும் எம்ஜிஆரை தூக்கி பிடிப்பதால் அந்த வாக்குகள் அதிமுகவுக்குதான் செல்லும். சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலுக்கு கிடைக்கும் அடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி என்ன நல்லாட்சி தந்தார்?” எனக் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்தச் செய்தியை ஜெயாடிவியும் ஒளிபரப்பியது. ஜெயா டிவியை ஆரம்பித்ததே ஜெயலலிதா தான். அப்படி இருக்கையில் அவருக்கு எதிரா பேச்சை அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதால் ஜெயலலிதாவின் விசுவாசிகள் கொந்தளித்துக் கிடக்கின்றனர். இதுகுறித்து அரசியல் விமர்சகர் கிஷோர் கேசாமி தனது ட்விட்டர் பதிவில், ‘’சீமான் என்கிற தற்குறி செல்வி ஜெயலலிதாவையும் , புரட்சித்தலைவர் எம் ஜி ஆரையும் தவறான பேசியது ஆச்சரியமில்ல , அதை ஜெயா டிவி யில் ஒளிபரப்பியது தான் கேவலம் , இதுக்கு விவேக் ஜெயராமன் துணை போனது அதை விட கேவலம் , உங்களுக்கெல்லாம் சோறு எப்படி இறங்குது ?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

click me!