துர்கா ஸ்டாலின் நடத்திய சிறப்பு பூஜை... லண்டனுக்கு புறப்படும் மு.க.ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Jun 19, 2021, 11:57 AM IST
Highlights

தேர்தலுக்கு முன்பே அவர் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கொரோனா முதல் அலை காரணமாக அவர் செல்லவில்லை. ஆகையால் இந்த முறை லண்டன் செல்ல ஏற்பாடாகி வருகிறது.

டெல்லி ராமகிருஷ்ண புரம் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். மலை மந்திரில் உள்ள உத்தரசுவாமி கோயில் பிகவும் பிரபலமானது. அரசியல் பிரமுகர்கள் பலரும் இங்கு தரிசனம் செய்வது வாடிக்கை. திமுக எம்.பி., ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி டெல்லி மலைமந்திர் முருகன் கோயிலுக்கு அடிக்கடி சென்று வணங்குவார். 

தீவிர கடவுள் பக்தரான துர்காதேவி ஸ்டாலினும் அடிக்கடி கோயில்களுக்கு சென்றுவருவார். இந்த முறை பிரதமரை சந்திக்க மு.க.ஸ்டாலின் சென்றார். அப்போது அவருடன் துர்கா ஸ்டாலினும் சென்றார். மு.க.ஸ்டாலினின் உடல்நலன் கருதி டெல்லியில் உள்ள கனிமொழி இல்லத்தில் இருந்து சமையல்களை எடுத்துச் சென்று ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. சமையலை தானே செய்து கொடுத்துள்ளார் துர்கா. அப்போது ஆர்.கே.புரத்தில் உள்ள மலைமந்திர் முருகன் கோயிலுக்கும் சென்றுள்ளார் துர்கா ஸ்டாலின். அங்கு மலை மந்திர் அர்ச்சகரை சந்தித்து சிறப்பு பூஜைகளையும் நடத்தியுள்ளார் துர்கா. மு.க.ஸ்டாலினின் உடல்நலம், அரசு நிர்வாகம்  சிறப்பாக நடைபெற வேண்டும் என இந்த பூஜைகளை துர்கா ஸ்டாலின் செய்துள்ளார்

.

இந்த மலைக்கோயிலுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். தென்னிந்திய கோயில் கட்டுமான பாணியில் கோயில் அமையப் பெற்றுள்ளது. அதேபோல் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக ஸ்டாலின் செல்லவுள்ளதாகவும் கூறுகிறார்கள். லண்டன் பயணத்துக்காக அனுமதி கோரப்பட்ட நிலையில் கிரீன் சிக்னல் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இதற்கு முன்பாக ஸ்டாலின் சிகிச்சைக்காகவும், ஓய்வுக்காகவும் லண்டனுக்கு பலமுறை தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். தேர்தலுக்கு முன்பே அவர் லண்டன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் கொரோனா முதல் அலை காரணமாக அவர் செல்லவில்லை. ஆகையால் இந்த முறை லண்டன் செல்ல ஏற்பாடாகி வருகிறது.
 

click me!