இரு அதிரடி தீர்ப்புக்கள்... அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைக்கும் சிறப்பு நீதிமன்றம்... பீதியில் எம்.எல்.ஏ.க்கள்..!

By Asianet TamilFirst Published Jan 14, 2019, 8:57 AM IST
Highlights

எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்றத்தால் முன்னாள் எம்.எல்.ஏ., இந்நாள் எம்.எல்.ஏ. ஆகியோர் அடுத்தடுத்து தண்டிக்கப்பட்டதால்,  தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் சிலர் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்றத்தால் முன்னாள் எம்.எல்.ஏ., இந்நாள் எம்.எல்.ஏ. ஆகியோர் அடுத்தடுத்து தண்டிக்கப்பட்டதால்,  தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் சிலர் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு சிறைத் தண்டனை வழங்கி சில வாரங்களுக்கு முன்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணாவுக்கு சிறை தண்டனை வழங்கி அதே சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. அடுத்தடுத்த தீர்ப்புகள் எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக வராததால் வழக்கில் சிக்கியுள்ள இந்நாள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள திமுகவைச் சேர்ந்த 7 பேர் மீதும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகளில் அடுத்த ஓரிரு மாதங்களில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கில் தீர்ப்பு எதிராக வந்தால், பதவி இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ராஜ்குமார், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராகத் தீர்ப்புகள் வந்துள்ளதால், பீதி அதிகரித்துள்ளது. 

குறிப்பாக முன்னள் அமைச்சரும் திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.என். நேரு மீது அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் காலியாக 20 தொகுதிகள் உள்ள நிலையில், ஓசூர் தொகுதியும் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை அடுத்தடுத்த வழக்குகளில் தீர்ப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக வந்தால், காலியாகும் எம்.எல்.ஏ.க்களின் தொகுதி எண்ணிக்கையும் அதிகமாகிவிடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். 

click me!