#BREAKING முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன்..!

Published : Aug 11, 2021, 06:42 PM IST
#BREAKING முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன்..!

சுருக்கம்

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமார் குறித்தும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 16ம் தேதி நேரில் ஆஜராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. 

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமார் குறித்தும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த கருத்துகள் தங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி இருவர் தரப்பிலும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. 

இந்த இரு அவதூறு வழக்குகளும் எம்.பி., எம்.எல்ஏக்களை விசாரிக்கக் கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு 3 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஆகஸ்ட் 16ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

PREV
click me!

Recommended Stories

அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!
களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி