
உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.
* மது குடிப்பது தொடர்பாக, பெண்களுக்கு எதிராக பேசவில்லை. பொதுவான அர்த்தத்தில்தான் பேசினேன். நான் பேசியதை, திரித்து வெளியிட்டுள்ளனர்.
- மனோகர் பரீக்கர்
* மற்ற நாடுகளை மிரட்டுவதற்காக இந்தியா வல்லரசாக வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்களுக்கு உலக நலனும், அமைதியும்தான் முக்கியம்.
- ராஜ்நாத் சிங்
* ரஜினி, கமல் தங்கள் கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரியப்படுதிட வேண்டும்.
- நக்மா
* தமிழக மக்கள் பணம் வாங்காமல் ஓட்டு போட்டால்தான் நல்ல ஆட்சியை அமைக்க முடியும்.
- குஷ்பு
* பல எம்.எல்.ஏ.க்கள் என்னை தொடர்புகொண்டு ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.’ என்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
- தினகரன்.
* தாக்குவதல்ல வீரம், தாங்குவதே வீரம். பொறுமை காப்போஒம், ஒற்றுமையால் தமிழ் இனத்தை கட்டிக் காப்போம்.
- வைரமுத்து
* ஜெயலலிதாவின் உருவப்பட திறப்பு விழாவுக்கு பி.ஜே.பியை அழைத்திருந்தால் அதற்கு சிலர் களங்கம் விளைவித்து, ‘பினாமி அரசு’ என்று கூறுவர்
- ஜெயக்குமார்
* மத்திய பட்ஜெட் மீது அதிருப்தி தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாமர மக்களில் துவங்கி பொருளாதார அறிஞர்கள் வரை அனைத்து தரப்பினரின் அதிருப்தியையும் பட்ஜெட் எதிர்கொண்டுள்ளது.
- ப.சிதம்பரம்
* பழனிசாமியின் ஓராண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும், தமிழகம் பின் தங்கி விட்டது.
- பிரேமலதா