வைகோவின் அரசியல் ராசி! கலங்கும் துர்கா ஸ்டாலின்: காத்துவாக்குல நாலு செய்திகள்...

 
Published : Feb 15, 2018, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
வைகோவின் அரசியல் ராசி! கலங்கும் துர்கா ஸ்டாலின்: காத்துவாக்குல நாலு செய்திகள்...

சுருக்கம்

The politics of Vaiko! Durga Stalin

தட்டையான பாதையை விட மேடு, பள்ளமான வழிகள் சுவாரஸ்யமானவை. செய்திகளும் அப்படித்தான்! நிகழ்வுகளை மட்டுமே பதிவு செய்வதை விட அனுமானங்கள், புதிர்கள், ரகசியங்கள், நடந்துவிட வாய்ப்புள்ளவை, நடந்து வெளியே தெரியாதவை ஆகியவையும் செய்திகளே.

அப்படி பரபரப்பு மசாலா தூவப்பட்ட செய்திகள் இதோ உங்களுக்காக...

*    சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்ட போது எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகளை அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆக்கிரமித்தனர் அல்லவா. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் இருக்கையில் அமரச்சொன்னபோது கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், மதுசூதனன் ஆகிய மூவரும் மறுத்துவிட்டனர்.

*    ரயில்வே தொழிற்சங்க செயலாளர் புதியவன் கொல்லப்பட்ட போது, காப்பாற்ற வந்தவர்களிடமிருந்து தப்பிக்க கொலையாளிகள் ஒரு வித புகையை கிளப்பிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.

*    கூடிய விரைவில் அரசியலை துவக்க இருக்கும் ரஜினிக்கு காவிரி நீர் விவகாரம் மிக முக்கிய கண்டமாக இருக்கும் என ஆரூடம் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

*    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் செலவுக்காக அவசரமாக ஆன்லைனில் டெண்டர் விட்டு 30 கோடி ரூபாயை கமிஷனாக வாங்கினர் என்று ஆளும் தரப்பு மீது புகார் கிளம்புகிறது.

*    ரங்கஸ்தலம் தெலுங்கு படத்தில் ஹீரோ ராம்சரண் தேஜாவை விட, ஹீரோயின் சமந்தாவுக்கே அதிக முக்கியத்துவம் என அக்கட பூமியில் யாரோ கொளுத்திப் போட, மகனிடம் ‘இது உண்மையா?’ என்று மீசை முறுக்கினாராம் சிரஞ்சீவி!

*    பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல டெய்லர் தைக்கும் ஆர்கானிக் காட்டன் சேலைகளைத்தான் சசிகலா சிறையில் கட்டிக் கொள்கிறாராம்.

*    கள ஆய்வில் தன் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், அறிவாலய மேல் நிலை ஊழியர்கள் ஆகியோர் மீது வந்து விழும் ‘பண’ புகார்களை பார்த்து அதிர்ந்து கிடக்கிறாராம் ஸ்டாலின்.

*    பல முறை திட்டமிட்டு, தள்ளிப்போடப்பட்ட அமித்ஷாவின் தமிழக விசிட் கூடிய விரைவில் உறுதியாக நடக்குமென்கிறார்கள். ஆனால் அதற்கு முன் தமிழகத்தில் சில பெரிய அரசியல் மாற்றங்கள் நடந்துவிடுமாம்.

*    ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் இணைந்த கடைசிப்படம் கத்தி. அதன் பிறகு இப்போது இரண்டு பேரும் இணைந்த படத்தின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கத்தி பட க்ளைமாக்ஸில் 2ஜி அலைக்கற்றை ஊழலை  குத்திக் காட்டியிருப்பார் விஜய். இப்போது மோடி அரசை குறிவைத்து சில பொளேர் டயலாக்குகளுடன் படம் தயாராகி வருகிறதாம்.

*    வைகோவுக்கு ஸ்டாலின் அறிவாலயத்தில் அதிக முக்கியத்துவமும், இடமும்  கொடுக்கிறார் என்று தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் கடுப்பேறி இருக்கிறார்கள். ஸ்டாலினின் மனைவி துர்காவிடம் ‘பழைய விஷயங்களையெல்லாம் தளபதி பெருந்தன்மையா மறந்துடலாம். ஆனா அரசியலுக்கு இந்த குணம் ஒத்து வருமா?’ என்று கேட்க, அவரும் யோசிக்கிறாராம்.

ராசி, செண்டிமெண்டுகளில் அதிக நம்பிக்கையுடைய துர்கா, வைகோவின் அரசியல் ராசியை நினைத்துப் பார்ப்பாரேயானால் சிக்கல்தான்!

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!