சுகாதாரத் துறையில் பணியமர்ந்ததப்பட்ட திருநங்கைகள்….. மூன்றாம் பாலினத்துக்கு பெருமை  சேர்த்த எடப்பாடி !!

 
Published : Mar 21, 2018, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
சுகாதாரத் துறையில் பணியமர்ந்ததப்பட்ட திருநங்கைகள்….. மூன்றாம் பாலினத்துக்கு பெருமை  சேர்த்த எடப்பாடி !!

சுருக்கம்

special appointment of tansgender by tn govt in welfare dept

தமிழக சுகாதாரத் துறையில் லேப் டெக்னீஷியன் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு முதன்முறையாக 2 திருநங்கைகளை நியமித்து அவர்களுக்கு எடப்பாடி அரசு பெருமை சேர்த்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஜெயலலிதா  வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மூன்றாம் பாலினர் நலனிற்காக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவது, அரசுநலத் திட்டங்களை அவர்கள் பெறுவதற்கு ஏதுவாக மூன்றாம் பாலினர் நலவாரியம் அமைத்தது, அரசு வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வார்டு மேலாளராக பணியாற்றி வரும் எஸ்.நேயா மற்றும் எம்.பி.செல்வி சந்தோசம் ஆகிய இரண்டு மூன்றாம் பாலினர்களும், அவர்களை முறையான பணியிடத்தில் நியமனம் செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.



எஸ்.நேயா, நுண்ணுயிரியல் படிப்பில் முதுகலை பட்டமும், எம்.பி.செல்வி சந்தோசம், இயன்முறை சிகிச்சையில் பட்டயமும் பெற்றுள்ளனர்.

இவர்கள் அதிக கல்வித் தகுதி பெற்று இருந்தும் வயது வரம்பை கடந்து விட்டதால், அரசு இவர்களின் கோரிக்கையை சிறப்பு நேர்வாக ஏற்று, அரசு மருத்துவமனைகளில் அவர்களை முறையே ஆய்வக நுட்புனர் நிலை II மற்றும் இயன்முறை சிகிச்சையாளர் நிலைII ஆகிய பணி இடங்களில் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்து, அதற்கான பணிநியமன ஆணைகளை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று எஸ்.நேயா மற்றும் எம்.பி.செல்வி சந்தோசம் ஆகிய மூன்றாம் பாலினர் இருவருக்கும் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?
தமிழகம், புதுவையை தொடர்ந்து கேரளாவில் கடை விரிக்கும் விஜய்..? கொச்சியில் கூட்டம்