AIADMK - DMK : ”இரண்டு நாட்களில் முடிஞ்சா ஆதாரத்தை கொடுங்க பார்க்கலாம்.. SP வேலுமணியை சீண்டிய செந்தில் பாலாஜி

Raghupati R   | Asianet News
Published : Nov 29, 2021, 11:31 AM IST
AIADMK - DMK :  ”இரண்டு நாட்களில் முடிஞ்சா ஆதாரத்தை கொடுங்க பார்க்கலாம்.. SP வேலுமணியை சீண்டிய செந்தில் பாலாஜி

சுருக்கம்

‘முடிந்தால் இரண்டு  நாட்களில் முடிஞ்சா ஆதாரத்தை கொடுங்க பார்க்கலாம்’ முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை சீண்டியிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் வி. செந்தில் பாலாஜி கலந்துகொண்டுள்ளார். இதில் கோவை மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி பணிகளுக்கான பட்டியல்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஈஸ்வரன் வழங்கினார்.

அப்போது பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘கோவை மாவட்டத்தின்  வளர்ச்சி திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடையே  ஒப்படைக்கப்படும். அவர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார். முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி  எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது, எந்தெந்த சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது, அதன் வேலை உத்தரவு, வேலை தொடக்கம் ஆகிவற்றின் பட்டியலை தெளிவாக முதலில் வெளியிடட்டும்.

நிர்வாக அனுமதி பெறாமல், டெண்டர் விடாமல் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலை பணிகள் துவங்கப்பட்டது. நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடட்டும்.முடிந்தால் இரண்டு  நாட்களில் முடிஞ்சா ஆதாரத்தை கொடுங்க பார்க்கலாம். கோவை மாநகராட்சியின் நிதிநிலை மோசமாக உள்ளது.இதனால் படிப்படியாக கோவை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சாலை பணிகள் குறித்து வேலுமணியின் குற்றச்சாட்டை ஆராய்ந்து பார்த்தோம், அது போன்ற ஒன்றும் இங்கு இல்லை. அவர் தொடங்கியதாக சொல்லும் பணி தேர்தலுக்காக தொடங்கப்பட்ட பணி ஆகும். 300 பணிகள் என்று சொல்பவர் பட்டியல் வெளியிட்டிருக்கலாம்.நிர்வாக அனுமதி பெறாமல், டெண்டர் விடாமல் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலை பணிகள் துவங்கப்பட்டது’ என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!