60 சீட் ஜெயிச்சா எப்படி CM ஆக முடியும்..? ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து வாங்குவீங்களா.? ராமதாஸை பங்கம் செய்த விசிக.

By Ezhilarasan BabuFirst Published Nov 29, 2021, 11:12 AM IST
Highlights

ஆரம்ப புத்தியே தவறாக இருக்கிறது, அவரின் இந்த பேச்சை மிக கவனமாக கவனிக்க வேண்டும், 60 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்று சொல்கிற ராமதாஸ் ஏன்  200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று  சொல்ல தயங்குகிறார். ஏன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அப்படிதானே தைரியமாக அறிவித்தார் ஆட்சிக்கு வந்தார்.  200 இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்கள் மக்களிடத்தில் நீங்கள் கேட்கலாமே, 

60 இடங்களில் வெற்றி பெற்றால் எப்படி முதல்வராக ஆக முடியும் என்றும், ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து அன்புமணியை சி.எம் ஆக்குவீர்களா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் 60 இடங்களில் வென்றால் போதும் அன்புமணியை முதல்வர் ஆக்கிவிடலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ள நிலையில் சங்கத்தமிழன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 

வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு போராட்டம் நடத்தி அதன்மூலம் தமிழகத்தின் அரசியல் கட்சியாக உருவெடுத்தது பாமக. காலப்போக்கில் அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி கூட்டணி வைத்து வந்ததால், அக்காட்சி தலைமையின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. எந்த வன்னியர்களுக்காக கட்சியை ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்கு வந்தோமோ அதே வன்னியர்கள் முழுவதுமாக பாமக என்ற குடையின் கீழ் அணிதிரள வில்லையே என்பது மருத்துவர் ராமதாஸின் நீண்டநாள் ஏக்கமாக இருந்து வருகிறது. பாஜக, அதிமுக என இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்ளை எதிர்கொண்டுவரும் பாமக தனது செல்வாக்கு மிகுந்த பகுதிகளிலேயே கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஒரு கட்டத்தில் தனித்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்து, மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டும் எதிர்பார்த்த அளவுக்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. பிறகு வழக்கம்போல அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவுக்கே அக்காட்சி தள்ளப்பட்டது. தற்போது பாஜக உடன் அந்த காட்சியை அதிக நெருக்கம் பாராட்டி வருவதால், சொந்த சமூக மக்களே அக்காட்சியை புறக்கணிப்பதாக ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதேபோல் கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த கட்சி, தனித்தே களம் கண்டும், கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனால் மனமுடைந்து போன மருத்துவர் ராமதாஸ், கட்சி தொடங்கி 34 ஆண்டுகள் கடந்து விட்டது, ஆனால் இன்னும் கூட பாமகவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. நாம் யாருக்காக, எதற்காக கட்சி நடத்த வேண்டும்? ஒரேயடியாக கட்சியை கலைத்து விடலாமா? இத்தனை ஆண்டுகளாக அரசியல் நடத்திய எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றால் தவறு உங்கள் மீதா? என் மீதா எனதொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார் அவர். இதற்கிடையில் ஜெய்பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாமக நடத்தி வரும் போராட்டம், பொது சமூகத்தில் அக்கட்சிக்கு  நெகட்டிவ் இமேஜ்ஜை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டம் எப்படியாவது வன்னிய மக்களை சாதி ரீதியாக ஒன்று திரட்டி விட வேண்டும் என்ற உள் நோக்கத்துடன்  நடத்தப்படுவதாக அக்கட்சியின் மீது குற்றஞ்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அக்கட்சி தொடர்ச்சியாக சந்தித்து வரும் தொடர் தோல்வியில் இருந்து மீள வழி தேடிவருகிறது. 

இந்நிலையிலும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் மனம்விட்டு பேசினார். அதில், நாம் யாருக்காக போராடி இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தோமோ அவர்களே இப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று வழக்கு போட்டுள்ளார்கள், 42 வருடங்களாக மக்களுக்காக பாடுபட்டிருக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகளை நாம் பெறவேண்டும், ஒரு பூத்தில் 1000 வாக்குகளையாவது நாம் பெறவேண்டும். மொத்தம் 60 இடங்களில் வெற்றி பெற்றால்போதும் அன்புமணியை முதல்வராக்கி விடலாம், அன்புமணியைப்போல ஒரு திறமைசாலி யாரும் கிடையாது.  இவ்வாறு பேசினார். இந்த பேச்சை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அக்கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சங்கம் தமிழன் பேசுகையில், 

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்தில்லை. அதை விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது. அதற்கு எடுத்துக்காட்டு என்னால் சொல்ல முடியும், வன்னியர்களில் அறிவு சார்ந்தவர்கள் விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை நோக்கி வருகை தருகிறார்கள். அதில் ஒருவரை நாங்கள் எம்எல்ஏ ஆக்கி இருக்கிறோம். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 60 இடங்களில் பாமக வென்றுவிட்டால் அன்புமணியை முதல்வராக்கி விடலாம் என ராமதாஸ் கூறிவருகிறார். இதை கேட்கும் போது நகைப்பாக இருக்கிறது. 60 இடங்களில் வெற்றி பெற்று விட்டால் முதல்வர் ஆகிவிட முடியுமா? மொத்தம் 234 தொகுதிகளில் 118 இடங்களில் வென்றால் தான் முதல்வராக முடியும், அப்படியெனில் இந்த கருத்தே தவறாக இருக்கிறது. 60 இடங்களில் வெற்றி பெற்றால் மீதி 58 இடங்களுக்கு எங்கே போவீர்கள். அப்படி என்றால் ஸ்வீட் பாக்ஸை கொடுத்து அன்புமணியை முதல்வர் ஆக்குவீர்களா? அல்லது ஸ்வீட் பாக்ஸ்  வாங்கிக்கொண்டு நீங்கள் போய் சேருவீர்களா?

ஆரம்ப புத்தியே தவறாக இருக்கிறது, அவரின் இந்த பேச்சை மிக கவனமாக கவனிக்க வேண்டும், 60 இடங்களில் வெற்றி பெற்றால் போதும் என்று சொல்கிற ராமதாஸ் ஏன்  200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று  சொல்ல தயங்குகிறார். ஏன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அப்படிதானே தைரியமாக அறிவித்தார் ஆட்சிக்கு வந்தார்.  200 இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்கள் மக்களிடத்தில் நீங்கள் கேட்கலாமே, அதைத் தவிர்த்து 60 இடங்களில் வெற்றி பெற வையுங்கள் என்று கேட்பது சரியா.? ஒரு காலத்தில் ராமதாஸ் பின்னால் வன்னியர்கள் திரண்டது உண்மைதான், ஆனால் இப்போது பாதி வன்னியர்கள் அண்ணன் வேல்முருகன்  பின்னால் சென்று விட்டார்கள். இன்னும் பாதி பேரை துரைமுருகன் திமுகவுக்கு கூட்டிச் சென்று விட்டார். இன்னொரு பகுதி பிஜேபி பின்னால் அணிவகுத்து நிற்கிறது.  அதனால்தான் இப்போது ராமதாஸ் புலம்புகிறார். ஒருகாலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனே அவரை புகழ்ந்து தமிழ் குடிதாங்கி என பட்டம் கொடுத்தார். அப்படிப்பட்ட ஒரு மனிதர் என்று புலம்பத் தொடங்கிவிட்டார். ராமதாசுக்கு வயது அதிகமாக அதிகமாக அவருக்கு வருத்தம் இருக்கிறது, அதை இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பேசியுள்ளார். 

 

click me!