விபத்தில் சிக்கிய பாமக தலைவர் அன்புமணியின் மனைவி.. சிறிய காயமின்றி உயிர் தப்பினார்..!

By vinoth kumar  |  First Published Oct 26, 2022, 11:35 AM IST

பாமக  தலைவர் அன்புமணியின் மனைவி சௌவுமியா. இவர், நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து  திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு டொயோட்டா இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார். 


பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய காயமின்றி சௌமியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

பாமக  தலைவர் அன்புமணியின் மனைவி சௌவுமியா. இவர், நேற்று முன்தினம் காலை சென்னையில் இருந்து  திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு டொயோட்டா இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் - சென்னை சாலையில் உள்ள பாதிரி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர டீக்கடையில்  இருந்து கார் ஒன்று திடீரென சாலையில் திரும்பியது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- திருச்சி இளைஞரின் உயிரிழப்புக்கு ஆளுநர் தான் காரணம்.. பகீர் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்..!

அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக வந்த காரை ஓட்டி வந்தவர் திடீரென பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் சௌவுமியா அன்புமணி வந்த கார் உள்பட 5 கார்கள் புறவழிச்சாலையில் ஏறிய கார் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால், அடுத்தடுத்து ஒன்றன் மீது ஒன்று மோதிக் கொண்டது. இந்த விபத்தில் சிக்கிய 5 கார்களும் லேசான சேதமடைந்தது. காரில் வந்த சௌவுமியா அன்புமணி ராமதாஸ் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் விபத்தில் சிக்கியதால் சௌவுமியா அன்புமணி வேறு கார் மூலம் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். 

இதையும் படிங்க;-  ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்துங்க.. அரசுக்கு ஐடியா கொடுக்கும் அன்புமணி..!

click me!