தென்னகத்து ஜான்சிராணியே... எங்க அக்கா மாதிரி சிறந்த தலைவி உலகில் இல்ல... தமிழிசையை கலாய்த்த பஜக தொண்டர்!

Asianet News Tamil  
Published : Mar 09, 2018, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
தென்னகத்து ஜான்சிராணியே... எங்க அக்கா மாதிரி சிறந்த தலைவி உலகில் இல்ல... தமிழிசையை கலாய்த்த பஜக தொண்டர்!

சுருக்கம்

South janchrani our sister model is the best leader in the world

எங்க அக்கா மாதிரி சிறந்த தலைவி உலகில் இல்லை, தென்னகத்து ஜான்சிராணியின் இந்த செயல் வரவேற்கத்தக்கது என கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசையை தனது முகநூலில் கலாய்த்துள்ளார்.

திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைத்த சம்பவத்தில் தொடர்புடைய பாஜக பிரமுகர் முத்துராமனை கட்சியிலிருந்து நீக்கிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனுக்கு பாஜக கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருப்பத்தூரில் பெரியார் சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தினர்.

அந்த விவகாரமும் பூதாகரமாகியதும், அந்த சம்பவத்தில் தொடர்புடைய வேலூர் பாஜக நிர்வாகி முத்துராமனை கட்சியிலிருந்து நீக்கினார் தமிழிசை சவுந்தராஜன்.
இந்நிலையில், முத்துராமனை கட்சியிலிருந்து நீக்கியதற்கு அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரும், ஹெச்.ராஜாவின் ஆதரவாளர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழிசைக்கு எதிராக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அதில்,  “முத்துராமனை நீக்கியது கடைந்தெடுத்த முட்டாளத்தனம்னு நான் சொல்ல விரும்பினாலும், அப்படி சொன்னால் நானும் நீக்கப்படுவேன் என்பதால் அதை சொல்லாமல்  தவிர்க்கிறேன்... பாஜகவில் பாஜகவினர் இருக்க வேண்டும், கட்சி வளர வேண்டும் என்றால், பாஜகவில் உள்ள காங்கிரசார் தான் முதலில் நீக்கப்பட வேண்டும்னும் சொல்ல தோணுது... ஆனா அதை சொன்னாலும் பிரச்சனை என்பதால் அதையும் நான் சொல்லல.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் அப்படின்னு பாரதி சொன்னதை சொல்லி காட்டனும்னு தோணுது... இந்த பாழாய் போன பயம் வந்து சொல்லாமல் தடுக்குது... கட்சி, பதவி என்பது பாருங்க எவ்ளோ பெரிய பயமுறுத்தும் ஆயுதமா இருக்கு...

எங்க அக்கா மாதிரி சிறந்த தலைவி உலகில் இல்லை என்ற இறுதியான, உறுதியான சொல்லை! சொன்னால்தான் நான் தப்பிக்க முடியும் என்ற காரணத்தால், தென்னகத்து ஜான்சிராணியின் இந்த செயல் வரவேற்கத்தக்கது என கூறி, எங்க அக்காவுக்கு சிரம் தாழ்த்திய வணக்கங்களையும், அவங்க நயினாவை நோக்கி, காங்கிரசும், காங்கிரசின் வழித்தோன்றல்களும் வாழ்கன்னும் கூவிக்கொண்டு விடைபெறுகிறேன்... நன்றி வணக்கம்...

(எங்க அக்கா பெரியார், பிரபாகரனின் பக்தை என்பது நிறைய பேருக்கு தெரியாது. அது பற்றி தனியே எனது அனுபவத்தை எழுதுகிறேன்)" என அவர் பாஜக தலைவரை அதுவும் மகளீர் தினத்தில் இப்படி விமர்சித்திருப்பதை சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

வெறும் 4 ஆண்டுகளில் தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கிய திமுக.. அண்ணாமலை விமர்சனம்..!
தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்..!