
தென்னிந்திய ஊடகங்கள் சிறப்பான பணியை செய்து வருவதாகவும், அரசியல் சமூகத்தில் நடக்கும் நகர்வுகளை ஊடகத்தினர் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் கூறினார். மேலும் உண்மைகளை நிரந்தரமாக மறைக்க முடியாது என்றும் கூறினார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி துணை பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழிக்க அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிர்மலா தேவியை தான் பார்த்ததே இல்லை என்று கூறியிருந்தார். செய்தியாளர்கள் உடனான சந்திப்புக்குப் பின், பெண் நிருபரின் கன்னத்தை ஆளுநர் பன்வாரிலால் தட்டிக் கொடுத்தார். ஆளுநர் பன்வாரிலால், தன் கன்னததில் தட்டிக் கொடுத்தது குறித்து, சம்பந்தப்பட்ட பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், சென்னை நுங்கமபாக்கத்தில் ஊடக கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளாராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சூரியனை அவ்வப்போது மேகங்கள் மறைக்கும்; ஆனால் நிரந்தரமாக மறைக்க முடியாது. அதுபோலத்தான் உண்மையும். உண்மைகளை நிரந்தரமாக மறைக்க முடியாது என்று கூறினார்.
தென்னிந்திய ஊடகங்கள் சிறப்பான பணியை செய்து வருகின்றன என்றும் அரசியல் சமூகத்தில் நடக்கும் நகர்வுகளை ஊடகத்தினர் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன என்றார்.