முடங்கிக் கிடக்கும் குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை... ஜாக்பாட் கொடுக்கத் தயாராகும் எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2020, 4:43 PM IST
Highlights

மொத்த நிவாரணம் ரூ.2,570 கோடியில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.987 கோடி (38% நிவாரணம்) மத்திய பாஜக அரசு ஒதுக்கியிருக்கிறது. ஆகையால், நிவாரணத் தொகை அதிகம் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா பரிசோதனை மையங்கள், உபகரணங்கள் அதிகம் வைத்திருக்க வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு தனி படுக்கையறைகளை அரசு, தனியார் மருத்துவமனையில் நிறுவ வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் வழங்க வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். கொரோனாவால் பாதிப்படைந்த தொழிலாளர்கள் மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கெனவே டெல்லியில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால்,  ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் 8.5 லட்சம் பயனாளிகளுக்கு ரூ .4000- 5000 ஓய்வூதியம் வழங்கப்படும். இலவச பொருட்கள், முன்பை விட  50% அதிக அளவுடன், 72 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். இரவு தங்குமிடங்களில் ஒவ்வொரு நபருக்கும் மதிய உணவு மற்றும் இரவு உணவு இலவசமாக வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான உத்தரவுகள் தனியாக வெளியிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 144 உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருவதால் பலரும் வேலைகள் இன்றி முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அன்றாடம் காய்ச்சிகளான பலரும் இந்த அறிவிப்பால் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக கூறி இருக்கிறார். இந்நிலையில், எவ்வளவு நிவாரணத் தொகையை அவர் அறிவிப்பார்? அது எப்படி தம்மை வந்தடையும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ஏழை எளிய மக்கள். மொத்த நிவாரணம் ரூ.2,570 கோடியில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.987 கோடி (38% நிவாரணம்) மத்திய பாஜக அரசு ஒதுக்கியிருக்கிறது. ஆகையால், நிவாரணத் தொகை அதிகம் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!