வைரஸ் கிருமியுடன் மருத்துவமனையில் ஓடும் பாலிவுட் பாடகி..!! கொரோனா வந்தும் அடங்காத திமிர்...!!

Published : Mar 23, 2020, 03:26 PM IST
வைரஸ் கிருமியுடன் மருத்துவமனையில் ஓடும் பாலிவுட் பாடகி..!!  கொரோனா வந்தும் அடங்காத திமிர்...!!

சுருக்கம்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 41 வயதுடைய பாலிவுட்  பாடகி கணிக கபூர் .  இவர் கடந்த மார்ச் 14-ஆம் தேதி லண்டனிலிருந்து லண்டனில் இருந்து  அம்மாசி விமான நிலையம் வந்திறங்கினார் . 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்  பாடகி கணிக கபூர் மருத்துவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் சிஎம்ஓஏ மருத்துவமனையின் இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் .  உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 41 வயதுடைய பாலிவுட்  பாடகி கணிக கபூர் .  இவர் கடந்த மார்ச் 14-ஆம் தேதி லண்டனிலிருந்து லண்டனில் இருந்து  அம்மாசி விமான நிலையம் வந்திறங்கினார் .  பின்னர் அங்கிருந்து தாஜ் ஹோட்டலுக்கு  சென்ற அவர்.  அங்கு அறை எடுத்து தங்கியதுடன் அங்கிருந்து  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்து கொண்டார் .  விஜபிக்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் நடந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட அவர்,  உறவினர்களையும் சந்தித்துள்ளார். 

இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில்  அவருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் கலக்கமடைந்துள்ளனர் .  அதில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் இடம் பெற்றுள்ளனர் .  இந்நிலையில் கனிகா கபூர் தனிமைப்படுத்தப்பட்ட உத்தர பிரதேசத்தின் தலைநகரில் உள்ள சஞ்சய்காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் .  இந்நிலையில் அவர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டு அதிகாரி பாடகி கனிகா கபூர் ,  சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என புகார் அவர் மீது  தெரிவித்துள்ளார் .  அதில் கனிகா கபூர் முறையாக சிகிச்சைக்கு  ஒத்துழைக்கவில்லை ,  மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த அறையை அவருக்குக் கொடுத்தும்  அவர் குதர்க்கமாக நடந்து கொள்கிறார் .  அவரைப் பாதுகாக்கவே கூடுதல் காவலர்களை ஏற்பாடு செய்துள்ளோம் .  ஏனெனில் அவர் ஓடிப்போய் மருத்துவமனையில் உள்ள இன்னும் பலருக்கு அவர் தொற்று ஏற்படுத்த  வாய்ப்புள்ளது.   இதனால் அவரை அறிவுறுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார் . 

இந்நிலையில் அந்த மருத்துவமனையின் மருத்துவர் அகர்வால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரோஜினி நகர் காவல் நிலையத்தில் கனிகா மீது புகார் தெரிவித்துள்ளார் கொரொனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்ட விதிமுறைகளில் கனிகா அலட்சியம் காட்டி வருகிறார் .  கடந்த 14ஆம் தேதி அவர் விமான நிலையத்தில் வந்த போதே  அவரை தனிமைப்பட்டு இருக்கும்படி அனுமதிக்கும்படி கேட்டுகொண்டார்.   ஆனால் அவர் தொடர்ந்து பல இடங்களில் சுற்றி பலருக்கும் கொரோனா வர காரணமாக இருந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் அவரது ஆண் நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர் . அதேபோல  தொழிலதிபர் ஓஜாஸ் தேசாயை போலீசார் தேடி வருகின்றனர் .  அவர் பாடகி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து கடந்த 16ஆம் தேதி வெளியேறியுள்ளார், இதுவரையில் அவரைப்பற்றி சரியான முகவரி கிடைத்தால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில் கணிக கபூர் தங்கியிருந்ததையடுத்து   தாஜ் ஹோட்டலை மூடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்நிலையில் கனிகா கபூருடன்  உரையாடிய 11 ஊழியர்களை தனிமைபடுத்த ஒட்டல் நிர்வாகம் அனுப்பிஉள்ளது குறிப்பிடதக்கது..

PREV
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!