மேட் இன் தமிழ்நாடு என்ற நிலை உருவாகும்... அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை!!

Published : Mar 27, 2022, 07:33 PM IST
மேட் இன் தமிழ்நாடு என்ற நிலை உருவாகும்... அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை!!

சுருக்கம்

நிச்சயம் மேட் இன் தமிழ்நாடு என்ற நிலை உருவாகும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

நிச்சயம் மேட் இன் தமிழ்நாடு என்ற நிலை உருவாகும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் பதிலடி கொடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், நிச்சயம் மேட் இன் தமிழ்நாடு என்ற நிலை உருவாகும் எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கரூர் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இந்த முகாமில் 130 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். 14,500 பணியாளர்கள் தேவை என்ற நோக்கில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனங்களில் தேர்வான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி அவர்களை பாராட்டினார்.

பின்னர் இந்த விழாவில் பேசிய அவர், வேலை கொடுப்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் பாலமாக இருந்து அனைவருக்கும் வேலை கிடைக்க இம்முகாம் கடந்த 10 மாதத்தில் 2வது முறையாக நடத்தப்பட்டு வருகிறது. அனைவரும் பாராட்டும் வகையில் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அவற்றை ஐ.டி.ஐ, டிப்ளமோ படிப்பவர்களுக்கும் வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தவுடன் அவற்றையும் நிறைவேற்றியுள்ளார். நம் முதல்வர் உலக நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்பதற்கான பணிகளில் தொடங்கி இருக்கிறார். நிச்சயம் மேட் இன் தமிழ்நாடு என்ற நிலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!