
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேரந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 16 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரைத் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக 89 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான வேட்புமனு தாக்கலில் ராகுல் காந்தியைத் தவிர வேறு யாரும், வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.
இதையடுத்து போட்டியின்றி ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வரும் 16 ஆம் தேதி, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், தமிழ்நாட்டுக்கு வருமாறு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு, ராகுல் காந்திக்கு அழுத்தம் கொடுத்து அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அதற்கு திருவனந்தபுரம் போகும்போது, கன்னியாகுமரி சென்று, பிறகு சென்னை வருவதைப் பற்றி அப்புறம் பேசலாம் என்றும், தற்போதைய காங். தலைவர் சோனியாவிடம் கேட்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளதாக தெரிகிறது. சென்னை செல்வதற்கு இப்போது என்ன அவசரம்... சென்னை செல்வது பற்றி அப்புறம் பேசலாம் என்று சோனியா தரப்பு கூறியதாக தெரிகிறது.
தமிழ்நாட்டுக்கு செல்வது குறித்து, அதுவும் சென்னைக்கு செல்வது என்றாலே சோனியா காந்தி யோசிக்கிறாராம். அவர் மனதுக்குள் இன்னும் பயமும் படபடப்பும் இருப்பதாகவே சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைவரான பிறகும், ராகுல் காந்திக்கு சென்னை அழைப்பு குறித்து சோனியா, வேண்டாம் என்றே கூறி வருகிறாராம். ராகுல் காந்தியும் சோனியாவின் பேச்சை மீறி எந்த முடிவும் எடுப்பதில்லையாம்.