குஜராத் தேர்தலால் ரெண்டு நல்ல விஷயம் நடந்திருக்கு? உ.பி. முதல்வர் ‘கிண்டலோ கிண்டல்’

Asianet News Tamil  
Published : Dec 12, 2017, 10:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
குஜராத் தேர்தலால் ரெண்டு நல்ல விஷயம் நடந்திருக்கு?  உ.பி. முதல்வர் ‘கிண்டலோ கிண்டல்’

சுருக்கம்

Gujarat voters taught Rahul Gandhi the importance of visiting temples Yogi Adityanath

ராகுல் காந்தி கோயிலுக்கு செல்வது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கிண்டல் செய்துள்ளார்.

குஜராத் மாநிலச் சட்டசபைத் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளான நேற்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அகமதாபாத் நகரில் உள்ளஜெகந் நாத் கோயிலுக்கு சென்று வழிபாடுசெய்தார்.

அது குறித்து, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கேள்வி எழுப்பி இருந்தார். அவர் கூறுகையில், “ குஜராத் தேர்தல் இரு நல்ல விஷயங்களை செய்து இருக்கிறது. ஒன்று, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்து இருக்கிறது. 2வதாக, ராகுல் காந்தியை கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வைத்துள்ளது’’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களை கைவிட மாட்டோம்.. சட்டப்பேரவையில் வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
விசில் போடு.. தவெக தேர்தல் சின்னம் இதுதான்.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!