சோனியா காந்தியின் குடியுரிமைச் சான்றிதழ்... ஆதாரத்தை வெளியிட்டு அதிர வைத்த ஹெச்.ராஜா..!

By Thiraviaraj RMFirst Published Apr 24, 2020, 12:50 PM IST
Highlights

சோனியா காந்தியின் குடியுரிமை சான்றிதழிலை வெளியிட்டு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அதிர வைத்து இருக்கிறார். 

சோனியா காந்தியின் குடியுரிமை சான்றிதழிலை வெளியிட்டு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அதிர வைத்து இருக்கிறார். 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் கடந்த 16ம்தேதி இரு சாதுக்கள் உள்ளிட்ட 3 பேர் சில்வாசாவுக்கு வந்து கொண்டிருந்த போது கடாக்சின்சாலை கிராமத்தில் ஒரு கும்பலால் திருடர்கள் என நினைத்து அடித்துக்கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாதர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அர்னாப் கோஸ்வாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு குற்றம்சாட்டிப் பேசினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளி்ட்ட பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸார் அர்னாபுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் சோனியாகாந்தியின் குடியுரிமை சான்றிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. அவரது பதிவில், ‘’சோனியாவின் குடியுரிமை சான்றிதழிலேயே சோனியா என்கிற அன்டானியா மைனோ என்று உள்ளது. எனவே அர்ணாப் கோஸ்வாமி பேசியதில் தவறென்ன?’’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோனியாவின் குடியுரிமை சான்றிதழிலேயே சோனியா என்கிற அன்டானியா மைனோ என்று உள்ளது. எனவே அர்ணாப் கோஸ்வாமி பேசியதில் தவறென்ன. pic.twitter.com/b7dNLbgCMY

— H Raja (@HRajaBJP)

 

click me!