கொரோனா பரவலை தடுக்க சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்த சென்னை காவல்துறை.. பாராட்டி தள்ளிய டாக்டர் ராமதாஸ்..!

By vinoth kumarFirst Published Apr 24, 2020, 12:22 PM IST
Highlights

சென்னை அண்ணா சாலை முழுமையாக மூடப்பட்டதன் பயனாக சென்னையின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து குறைந்திருக்கிறது. இது சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்த சென்னை காவல்துறைக்கு பாராட்டுகள்!

இந்தியாவில் கொரோனா சோதனை 30 மடங்கு அதிகரிக்கப்பட்டாலும் கூட, நோய்ப்பரவல் விகிதம் அதிகரிக்கவில்லை; கட்டுக்குள் தான் இருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்தியாவில் கொரோனா சோதனை 30 மடங்கு அதிகரிக்கப்பட்டாலும் கூட, நோய்ப்பரவல் விகிதம் அதிகரிக்கவில்லை; கட்டுக்குள் தான் இருக்கிறது. கொரோனா விரைவில் ஒழிக்கப்படும் என்பதை இது காட்டுவதாக மத்திய அரசு கூறியிருப்பது நிம்மதியளிக்கிறது. இதற்கு காரணம் ஊரடங்கு தான். அதை உறுதியாக கடைபிடிப்போம்!

சென்னை அண்ணா சாலை முழுமையாக மூடப்பட்டதன் பயனாக சென்னையின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து குறைந்திருக்கிறது. இது சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும். சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்த சென்னை காவல்துறைக்கு பாராட்டுகள்!

சென்னையில் 4 பேர் உட்பட தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. இது நிச்சயமாக அவர்களின் தவறு அல்ல. குடும்பத்தினரிடமிருந்து தான் தொற்றியிருக்க வேண்டும். பெரியவர்கள் கவனமாக இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்!

இந்தியப் பெருநகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மும்பை-4205, டெல்லி-2248, சென்னை-400. மும்பை, டெல்லியுடன் ஒப்பிடும் போது சென்னை நிலைமை பரவாயில்லை. நோய்த் தடுப்பில் அரசுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்போம்; சென்னையை கொரோனா இல்லா நகரமாக மாற்றுவோம்!

ஊரடங்கால் மின்வாரிய நிதிநிலைமை மோசமடைந்துள்ளது. மின்னுற்பத்தி நிறுவனங்கள், நிலக்கரிக்கு கொடுக்க நிதியின்றி தமிழகம் இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று நிதி மற்றும் கடன் உதவியை வழங்கி மின்வாரியத்தை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

click me!