எடப்பாடியை, டெல்லியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள்: புகழேந்தி பேட்டி

 
Published : Aug 27, 2017, 01:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
எடப்பாடியை, டெல்லியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள்: புகழேந்தி பேட்டி

சுருக்கம்

Someone runs from Delhi - Pugalendi

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை டெல்லியில் இருந்து யாரோ இயக்கி வருவதாக கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி கூறியுள்ளார்.

சென்னையில், செய்தியாளர்களை புகழேந்தி இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக பிளவுபடுவதற்கும், கட்சி சின்னம் முடக்கப்படுவதற்கும் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து வாக்களித்தபோது சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்களை டெல்லியில் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்றும் புகழேந்தி குற்றம் சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!