ஒ.பி.எஸ் அணியில் சிலர் அந்தர்பல்டி அடிக்கின்றனர் - பேச்சுவார்த்தை குறித்து வாய்திறந்த எடப்பாடி...

 
Published : Apr 30, 2017, 08:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
ஒ.பி.எஸ் அணியில் சிலர் அந்தர்பல்டி அடிக்கின்றனர் - பேச்சுவார்த்தை குறித்து வாய்திறந்த எடப்பாடி...

சுருக்கம்

someone people change the character in ops team - speech edappadi palanicha

இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு சிலர் முட்டுகட்டை போடுவதாகவும், ஒ.பி.எஸ் அணியில் சிலர் அந்தர்பல்டி அடிக்கின்றனர் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கலந்து கொண்டு கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:

இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு சிலர் முட்டுகட்டை போடுகின்றனர்.

ஒ.பன்னீர்செல்வம் அணியில் சிலர் அந்தர்பல்டி அடிக்கின்றனர்.

90 சதவீதம் நிர்வாகிகள் நம் அணியில் தான் இருக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி.

நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பலத்தை நிரூபித்துள்ளோம்.

நிதி பற்றாக்குறையிலும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

எனது உழைப்பினால் மக்களோடு மக்களாக இருந்து பொறுப்பிற்கு வந்தவன் நான்.

தந்தையின் ஆதரவால் மட்டுமே பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்.

ஆட்சியை கைப்பற்றலாம் என்ற திமுகவின் எண்ணமும், பிரிந்து சென்றவர்களின் எண்ணமும் கானல்நீர் போன்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

 

 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!