வீடியோவில் சிக்கிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.: தலையிலடிக்கும் எடப்பாடி அமைச்சரவை....

Asianet News Tamil  
Published : Dec 03, 2017, 10:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
வீடியோவில் சிக்கிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.: தலையிலடிக்கும் எடப்பாடி அமைச்சரவை....

சுருக்கம்

Solur MLA Kanagaraj video leaked

எடப்பாடி அரசின் பெயரைக்கெடுக்க வேறு யாரும் வேண்டாம்! அவரது எம்.எல்.ஏ.க்களே போதும். அதிலும் சூலூர் தொகுதி கனகராஜ் ஒருவரே போதும். இப்போது வரை இந்த ஆட்சியை வெச்சு செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் அவரது லேட்டஸ்ட் வீடியோ அ.தி.மு.க. அமைச்சரவையை கதற விட்டிருக்கிறது. 

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான கனகராஜ் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கட்சியின் மானத்தை கப்பலேற்றுவார். எடப்பாடி அணி, பன்னீர் அணி என்று பிரிந்து கிடந்தபோது எடப்பாடி அணியிலிருந்தவர், ஏதோ ஒரு பிரச்னைக்காக ‘இப்படியே பண்ணினாக்க நான் அணி மாறிடுவேன்.’ என்று மிரட்டினார். பின் பன்னீர் அணி எம்.எல்.ஏ. சரவணன் வீடியோ டிராப்பில் சிக்கியபோது இவரும் அதேபோன்று வாய்விட்டு வீடியோ டிராப்பில் சிக்கினார். 

திடீரென ‘பி.ஜே.பி.யுடன் கூட்டணி வைக்கிறதுதான் எங்க கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது.’ என்று பேட்டி தட்டினார். அந்த வகையில் இன்று ஒரு வீடியோவில் சிக்கியிருக்கிறார். 

அதாவது கோயமுத்தூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நடந்த நிலையில், அவரது தொகுதியிலிருந்து  ஓவ்வொரு ஏரியாவின் பொறுப்பாளர்களுக்கும் அ.தி.மு.க.வின் கொடிகளும், ஒரு அட்டைப்பெட்டியும் (அதில் உணவோ அல்லது தண்ணீர் பாட்டில்களோ இருக்கும் போல் தெரிகிறது.) பிறகு தலை எண்ணிக்கைக்கு ஏற்ப பணமு கொடுக்கப்படுகிறது. 

எம்.எல்.ஏ. கனகராஜே ஏரியாவின் பெயரை சொல்லி, பணத்தை உதவியாளரிடமிருந்து வாங்கி எண்ணியெண்ணி கொடுக்கிறார். இதை யாரோ ஒரு புண்ணியவான் நொடி பிசகாமல் எம்.எல்.ஏ.வின் முகத்தோடு சேர்த்து வீடியோ எடுத்து அப்லோடிவிட்டிருக்கிறார். 

இந்த வீடியோ மாலைக்கு மேல் வைரலாகிக் கொண்டிருக்க, அமைச்சர்கள் இதைப் பார்த்துவிட்டு மண்டை காய்ந்து கிடக்கின்றனர். 

எதிர்கட்சியினர், ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கே அ.தி.மு.க. இப்படித்தான் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறது. எம்.எல்.ஏ.க்களே இவ்வளவு பணத்தை அள்ளி வீசினால் அமைச்சர்க்ள் எந்தளவுக்கு கொட்டுவார்கள்.’ என்று வறுத்து வருகிறார்கள் இணையதளத்தில்.
ஆனால் எம்.எல்.ஏ. கனகராஜோ இது தொண்டர்கள் சென்ற வண்டியோட பெட்ரோல், டீசலுக்கு கொடுத்த பணம்.’ என்றிருக்கிறார். 

சர்தான், சனியன் வீடியோ ரூபத்துல வந்துடுச்சு!

PREV
click me!

Recommended Stories

தொழுகையின் போது மசூதியில் குண்டு வெடிப்பு.. 50 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தானில் பயங்கர கொடூரம்
அசுர பல செந்தில் பாலாஜியை வீழ்த்த அதிரடி வியூகம்..! ஆப்பசைக்கும் அதிமுக..!