ரஜினிக்கு ஆதரவாக துண்டு போட்ட சமூகநீதி பேரவை..!!

Published : Mar 20, 2020, 08:05 PM IST
ரஜினிக்கு ஆதரவாக துண்டு போட்ட சமூகநீதி பேரவை..!!

சுருக்கம்

ரஜினி எப்ப அரசியல் கட்சி ஆரம்பிப்பார் அதில் நாம் சேரலாம் என்று பல கட்சிகள் துண்டு விரிக்க காத்திருக்கிறார்கள். இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும், அவரது எண்ணப்படி ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் நடைபெறுவதற்கு ஆதரவாக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளாக மக்கள் சமூகநீதி பேரவை அறிவித்துள்ளது.

T.Balamurukan

இதுதொடர்பாக, பேரவையின் மாநில அமைப்பாளர் எஸ். கோவிந்தன், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர்..,

'தமிழக அரசியலில் லஞ்சம், ஊழல் மலிந்துவிட்டது. அரசியலை வணிகமயமாக்கி லாபம் ஈட்டும் கும்பலே ஆட்சிக்கு வருகின்றனர். அரசியல் கட்சிகள் கம்பெனிகளாக மாறிவிட்டன. கட்சிப் பொறுப்புகளும், அரசியல் பதவிகளும் சுயநலவாதிகளின் குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. கட்சிகளின் பெயரால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளிம் அட்டுழியம் அதிகரித்துவிட்டது.
இத்தகைய அரசியல் சூழலை மாற்ற புதிய கொள்கைகளை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ஆட்சிக்கு ஒரு தலைமை, கட்சிக்கு ஒரு தலைமை என்ற முடிவு வரவேற்புக்குரியது. அமெரிக்காவிலேயே அதிபரை தேர்வு செய்யும் தேர்தலில் கட்சித் தலைமை ஒன்றாவும், அதிபருக்கு ஒருவரையும் தேர்வு செய்கின்றனர். இதே அடிப்படையில் தமிழகத்திலும் நல்லவர்கள் மட்டுமே ஆட்சிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். அவற்றை வழிநடத்த நேர்மையான கட்சித் தலைமை வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் கூறியதைப் போன்று 2021இல் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்படவில்லையென்றால் பின்னர் எப்போதும் வாய்ப்பு இல்லாமல் போகும். அதற்கு மக்களை தயார்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமையவும், நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தலைமையேற்கவும் வலியுறுத்தி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளோம்.

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!