இப்போதாவது இந்த மதுக்கடைகளை மூடுங்க..!! நேரம் பார்த்து அரசுக்கு நெருக்கடி கொடுத்த ராமதாஸ்..!!

Published : Mar 20, 2020, 05:21 PM IST
இப்போதாவது இந்த மதுக்கடைகளை மூடுங்க..!! நேரம் பார்த்து அரசுக்கு நெருக்கடி கொடுத்த ராமதாஸ்..!!

சுருக்கம்

மதுக்கடைகள் கொரோனா  வைரசை பரப்பும் மையங்களாக மாறிவிட்டது ஆகவே  மனிதப் பேரழிவைத் தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் .   

கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார் . கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறினார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது .  இதுவரையில் இந்த வைரசுக்கு உலக அளவில் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

இந்நிலையில் இந்தியாவில் இந்த வைரசுக்கு 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது . இந்நிலையில்  இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.   இந்நிலையில் வணிக வளாகங்கள் ,  திரையரங்குகள் பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் இது  குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழிப்புணர்வு பரப்புரைகளையும் கடந்து மதுக்கடைகளில் கூட்டம்  வழிகிறது .  மதுக்கடைகள் கொரோனா வைரசை பரப்பும் மையங்களாக மாறிவிட்டது ஆகவே  மனிதப் பேரழிவைத் தடுக்க வசதியாக மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் . 

கொரோனா பரவலை தடுக்க பிரதமர் அறிவித்துள்ள ஒருநாள் மக்கள் ஊரடங்கு வரவேற்கத்தக்க நடவடிக்கை .  அவரது அறிவிப்பை மதித்து தனித்து இருப்போம் விழித்திருப்போம்...  அதையே அடுத்த மூன்று வாரங்களுக்கு வாடிக்கையாக மாற்றிக் கொள்ள முயலுவோம் .  மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பன்னாட்டு நிறுவனங்கள் ,  தொழில் வணிக அமைப்புகள் , தொழிலதிபர்கள் ,  வசதிபடைத்தவர்கள் ,  தாராளமாக நன்கொடை வழங்கி உதவிட வேண்டும் ,  இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!