கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க அதிரடி நடவடிக்கை..!! புதிதாக 18 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி

By Ezhilarasan BabuFirst Published Mar 20, 2020, 4:21 PM IST
Highlights

 இதனால் தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

இந்தியாவில் குழுவினர் வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்ய 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது .  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான பரிசோதனை முடிவுகள் வேகமாக கிடைக்கும் வகையில் பரிசோதனை   மையங்கள்  அதிகம் தேவைப்படுகிறது என்பதால் மந்திய அரசு  இந்த நடவடிக்கை எடுத்துள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா  உலகம் முழுவதும் பரவியது மக்களை அச்சுறுத்தி வருகிறது .

 

உலக அளவில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .  லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் குறுநாவல் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த வைரசுக்கு இதுவரை இந்தியாவில் ஐந்து பேர் பலியாகி உள்ளனர் . கொரோனாவை  கட்டுப்படுத்த நாடு முழுதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .  இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு  விமான நிலையங்களில்  தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது .

 

அதேபோல் கொரோனா இருப்பவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகிறது .  அதுபோல் சளி இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன்  மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு  கரோனா வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது .  இதனால் தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது.  அரசு நிறுவன ஆய்வகங்களில் மட்டும் பரிசோதனை செய்யப்படுவதால் ஆய்வு முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது .  ஆய்வு முடிவுகள் உடனடியாக கிடைக்கும் வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்வதற்கு 18 தனியார் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது .  
 

click me!