அட்சிக்கு வந்த 5 மாதத்தில் இவ்வளவு ஸ்பீடா..? ஆன்லைனில் வாடகை செலுத்த ஏற்பாடு.. தட்டித் தூக்கிய சேகர் பாபு..

By Ezhilarasan BabuFirst Published Oct 20, 2021, 9:39 AM IST
Highlights

இந்த வரிசையில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் அந்த இடங்களை பயன்படுத்தி வருவோர் மாதாமாதம் அதற்கான வாடகைத் தொகையை எளிமையாக செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கணினி வழியில் வாடகை செலுத்தும் முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், அது நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், இந்து சமய அறநிலை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறையில் பல சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழில் அர்ச்சனை போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. 

இந்த வரிசையில் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாடகைக்கு குடியிருப்போர் மற்றும் அந்த இடங்களை பயன்படுத்தி வருவோர் மாதாமாதம் அதற்கான வாடகைத் தொகையை எளிமையாக செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது வாடகை செலுத்துவோர் மாதத்தின்  1ஆம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என்றும், இணைய வழியாகவோ அல்லது கோயிலுக்கு சென்று கணினி வாயிலாகவோ அதை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: அடி தூள்.. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே வழிகாட்டும் முதல்வர் ஸ்டாலின்.. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர்.

இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தேவைப்படும் என்பதால் நிதி வசதி உள்ள கோயில்களில் அவைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அதற்கான அதிகாரம் மண்டல இணை ஆணையருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதோடு தேவையான பொருட்களை கொள்முதல் செய்து, அதற்கான செலவினை பொது நிதியிலிருந்து பெற்றுக்கொள்ள கருத்துருவை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:  எனது மூச்சு இருப்பதற்குள் கோட்டையில் அன்புமணி உட்கார வேண்டும்... இயலாமையில் துடித்த ராமதாஸ்.

அதேபோல இந்த திட்டத்தை செம்மையாக செயல்படுத்த கணினி பிரிண்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப  சாதனங்களை செயல் அலுவலர்கள், அறங்காவலர்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரிண்டர், கணினி உள்ளிட்ட இதர சாதனங்கள் தொடர்பான அறிக்கையை வரும் 25ஆம் தேதிக்குள் ஆணையர் அலுவலகத்திற்கு இணை ஆணையர்கள் அனுப்ப வேண்டும் என்றும் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர், அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார். 

 

click me!