27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு… தடபுடல் ஏற்பாடுகள்

Published : Oct 20, 2021, 08:49 AM IST
27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்பு… தடபுடல் ஏற்பாடுகள்

சுருக்கம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் இன்று பதவி ஏற்று கொள்கின்றனர்.

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் இன்று பதவி ஏற்று கொள்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழும் அளிக்கப்பட்டு விட்டன.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1421 வார்டு கவுன்சிலர்கள், 3007 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் என மொத்தம் 27,792 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் வென்றவர்கள் அனைவரும் இன்று அந்தந்த ஊராட்சிகளில் பதவி ஏற்று கொள்கின்றனர். கிட்டத்தட்ட 27 ஆயிரம் பேர் பதவியேற்க இருக்கின்றனர் வரும் 22ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்க இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!
இஸ்லாமிய நாடுகளில் மோடி, யூத நாடுகளில் ஜெய்சங்கர்..! உலக அளவில் இந்தியாவின் ராஜதந்திர வியூகம்..!