அண்ணாமலை இங்கிலீஷ் டுவீட்… தமிழில் பதில் சொன்ன பிரதமர் மோடி…! என்ன விஷயம் தெரியுமா….?

Published : Oct 20, 2021, 08:36 AM IST
அண்ணாமலை இங்கிலீஷ் டுவீட்… தமிழில் பதில் சொன்ன பிரதமர் மோடி…! என்ன விஷயம் தெரியுமா….?

சுருக்கம்

அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி: அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் வெளியாகி விட்டன. மொத்தம் 9 மாவட்டங்களில் மொத்தம் 27,792 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அதற்கான சான்றிதழையும் வழங்கிவிட்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினரை சந்தித்து பேசி உள்ளார்.

அது தொடர்பான போட்டோக்களை தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டு உள்ளார். அவரது பதிவு ஆங்கிலத்தில் இருக்கிறது. அவரது பதிவுக்கு பிரதமர் மோடி அழகான தமிழில் பதிலளித்து உற்சாகப்படுத்தி உள்ளார்.

 இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது: 

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள்  கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்.  எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.

அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் வென்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்தும், வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்து இருப்பதற்கு பாஜகவினரை உற்சாகப்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!