செருப்பு பிஞ்சிடும்.. அமைச்சர் முன்னிலையிலேயே அரசு ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ.,!

Published : Oct 19, 2021, 10:12 PM IST
செருப்பு பிஞ்சிடும்..  அமைச்சர் முன்னிலையிலேயே அரசு ஊழியர்களை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ.,!

சுருக்கம்

காஞ்சிபுரத்தில் சுற்றுலா வரும் யாத்திரிகர்கள் மற்றும் பக்தர்கள் தங்கும் வசதிகள் தமிழக அரசின் சார்பில் சர்வ தீர்த்த குளம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடமும் கட்டப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, டிஎஸ்பி முருகன், எம்.எல்.ஏ எழிலரசன் ஆகியோர் பார்வையிட்டனர். 

திமுக எம்.எல்.ஏ எழிலரசன் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் செருப்பு பிஞ்சிடும் என அரசு ஊழியர்களை மிரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காஞ்சிபுரத்தில் சுற்றுலா வரும் யாத்திரிகர்கள் மற்றும் பக்தர்கள் தங்கும் வசதிகள் தமிழக அரசின் சார்பில் சர்வ தீர்த்த குளம் பகுதியில் பயணியர் தங்கும் விடுதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடமும் கட்டப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, டிஎஸ்பி முருகன், எம்.எல்.ஏ எழிலரசன் ஆகியோர் பார்வையிட்டனர். 

அப்போது, பயணியர் தங்கும் விடுதி அருகே தனியாருக்கு சொந்தமான ஏராளமான சரக்கு லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு  நிலத்தில் லாரிகளை நிறுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை தடுக்காத அறநிலையத் துறை ஊழியர்களை அமைச்சர் மற்றும் ஆட்சியர் முன்னிலையிலேயே செருப்பு பிஞ்சிடும் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சர் முன்னிலையிலேயே அரசு ஊழியர்களை எம்எல்ஏ இப்படி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!