ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்... பாதுகாப்பா இருங்க... பொதுமக்களை கையெடுத்து கும்பிட்டு கேட்ட மோடி..!

By vinoth kumarFirst Published Mar 24, 2020, 9:01 PM IST
Highlights

வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால்,பொதுமக்கள் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என  பிரதமர் மோடி கையெடுத்து உ கும்பிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று இரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரயைாற்றினார். வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது. மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆகையால், பொதுமக்கள் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என  பிரதமர் மோடி கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.

click me!