
எதிரணியை வீழ்த்துவதற்கு துப்பாக்கி பட பாணியில் தனது ஆதரவாளர்களை எதிரணிக்கு அனுப்பி அங்கு நடக்கும் விவரங்களை சேகரித்து வருகிறார் தினகரன்.
பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்ததை அடுத்து சென்னையில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவையும் தினகரனையும் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இன்று சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், பொதுக்குழு உறுப்பினர்களே இல்லாமல் கூடியது எப்படி பொதுக்குழு ஆகும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தனது ஆதரவாளர்கள் ஸ்லீப்பர் செல்களாக நேற்று நடந்த பொதுக்குழுவில் கலந்துகொண்டதாகவும் முதல்வர் பழனிச்சாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் வரும்போது ஸ்லீப்பர் செல்கள் ஒவ்வொருவராக வெளிவருவர் எனவும் தெரிவித்தார்.