காவிக்கொடி கட்டியதை அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் கண்டிக்க வேண்டும் -உதயநிதி ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Jul 30, 2020, 3:45 PM IST
Highlights

 'காவி பூசுவது காட்டுமிராண்டித்தனமா? தெய்வீகச்செயலா?’என பட்டிமன்றம் நடத்தாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியையும் தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். 
 

 'காவி பூசுவது காட்டுமிராண்டித்தனமா? தெய்வீகச்செயலா?’என பட்டிமன்றம் நடத்தாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியையும் தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

கன்னியாகுமரி, குழித்துறை சந்திப்பில் அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டி அவமதிப்பு நடத்தப்பட்டது. அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டியது யார் என களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘’குமரியில் பேரறிஞர் அண்ணா சிலையில் ’காவிக்கொடி கட்டி’அவமதிக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறேன். 'காவி பூசுவது காட்டுமிராண்டித்தனமா? தெய்வீகச்செயலா?’என பட்டிமன்றம் நடத்தாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியையும் தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும்.

குமரியில் பேரறிஞர் அண்ணா சிலையில் ’காவிக்கொடி கட்டி’ அவமதிக்கப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறேன். 'காவி பூசுவது காட்டுமிராண்டித்தனமா?தெய்வீகச்செயலா?’ என பட்டிமன்றம் நடத்தாமல், அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அடிமைகள் குற்றவாளியையும் தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும்.

— Udhay (@Udhaystalin)

 

பெருந்தொற்று நேரத்தில் உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றி வரும் மருத்துவர்களுடன் இன்று கலந்துரையாடினேன். சிக்கல்கள், பிரச்சினைகள் மட்டுமன்றி தீர்வுகள் குறித்தும் அடர்த்தியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 3 மணிநேரம் நீடித்த கலந்துரையாடலைப் பயனுள்ளதாக்கிய மருத்துவர்களுக்கு நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!