உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியது தப்புதான்! பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மாவட்ட செயலாளர்.!

By vinoth kumar  |  First Published Oct 10, 2023, 10:52 AM IST

குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். 

Slander about the CM Stalin! AIADMK district secretary kumaraguru expressed regret at the public meeting

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதற்காக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொதுக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு வருத்தம் தெரிவித்தார். 

கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக, கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் புகார் அளித்தார்.

Latest Videos

இதையும் படிங்க;- முதல் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த மனைவி? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Slander about the CM Stalin! AIADMK district secretary kumaraguru expressed regret at the public meeting

இதன் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி  குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது பேச்சு குறித்து சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரிய பிறகும், அரசியல் உள் நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், காவல்துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனையை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சி..! திடீரென பாஜகவிற்கு ஜம்ப் அடித்ததால் பரபரப்பு

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று,  கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு வருத்தம் தெரிவித்தார். இது குறித்த அறிக்கை உயர்நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image