''விஜய் தமிழக முதல்வராக வந்தால் மகிழ்ச்சியடைவேன்'' - S.J.சூர்யா!

 
Published : Oct 02, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
''விஜய் தமிழக முதல்வராக வந்தால் மகிழ்ச்சியடைவேன்'' - S.J.சூர்யா!

சுருக்கம்

SJ Surya says I Will Be Happy If Actor Vijay Become Chief Minister Of TN

தமிழக முதல்வராக நடிகர் விஜய் வந்தால் மிகவும் மகிழ்ச்சி என இயக்குனரும் நடிகருமான S.J.சூர்யா பேட்டியளித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் இயக்குனரும் நடிகருமான S.J.சூர்யா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார், இந்த பேட்டியில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் அரசியலுக்கு நடிகர்கள் வரக் கூடாது என்பது சட்டமா?

நடிகர்கள் அரசியலுக்கு வந்ததற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளன. இது சுதந்திர இந்தியா... இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
என்னை பொருத்தவரை இளையதளபதி விஜய் முதல்வராகலாம். 
அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை அவர் கமிட்மென்ட்டாகவே செய்கிறார்.

இதையெல்லாம் தாண்டி அவர் நல்லெண்ணம் கொண்டவர். எனவே அவர் முதல்வரானால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..