திமுகவுக்கு ஆறு மாசம் டைம்.. முடிந்த பிறகு வேடிக்கைய பாருங்க.. விஜய் பிரபாகரன் ’ தில்’ பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2021, 3:46 PM IST
Highlights

ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, யாரும் தன்னை நேரில் வாழ்த்த வீட்டிற்கு வர வேண்டாம் என்றும், தேமுதிகவினர் அவரவர் ஊர்களில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொரோனா காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு ஆறு மாத காலம் அவகாசம் தருவதாகவும், அதற்கு பின்னர் நிறைய விமர்சிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்தின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது கட்சித் தொண்டர்கள் அவரது பிறந்தநாளை எளிமையாகவும், உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் என விஜயகாந்த் அறிவித்தார். அப்போது முதல் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, யாரும் தன்னை நேரில் வாழ்த்த வீட்டிற்கு வர வேண்டாம் என்றும், தேமுதிகவினர் அவரவர் ஊர்களில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கேற்ப அவரது தொண்டர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவரது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல தமிழக திரை பிரபலங்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் என ஏராளமானோர் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வாயிலகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் திமுக இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் காணொளிப்பதிவிட்டு விஜயகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான், ரோபோ சங்கர்,  தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பன் ஆகியோர் விஜயகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் ஹாசன், சரத்குமார் ஆகியோரும் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா காலத்தில் திமுக அரசின் செயல்பாடு நன்றாக இருந்தது. 6 மாத அவகாசத்திற்கு பிறகு புதிய அரசு குறித்து கருத்து தெரிவிப்போம், விஜயகாந்த் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். விஜயகாந்த்  நீடுழி வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். தேமுதிகவிற்கு தோல்வி ஏற்பட்டிருந்தாலும் விஜயகாந்துக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். என் தந்தையை நான் தெய்வமாக வணங்குகிறேன்.விஜயகாந்த் ஏற்கனவே கூறியபடி, புதிய அரசுக்கு 6 மாத காலம் அவகாசம் தருகிறோம். அதன் பிறகு நிறை குறையை கூறுவோம். கொரோனா காலத்தில் திமுக அரசு நன்றாக செயல்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
 

click me!