மதன் ரவிச்சந்திரனை கட்சியில் இருந்து தூக்கி எறிந்த பாஜக.. ஓங்கி அடித்த அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2021, 2:58 PM IST
Highlights

பாஜக பொதுச்செயலாளர் கே.டி ராகவன் குறித்து ஆபாச வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய யூடியூபர் மதன் அதிரடியாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ளார்.

பாஜக பொதுச்செயலாளர் கே.டி ராகவன் குறித்து ஆபாச வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய யூடியூபர் மதன் அதிரடியாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ளார்

ஒருசில ஊடகங்களில் பணியாற்றி. பின்னர் யூடியூப் சேனல் ஆரம்பித்து, பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு, அதன் மூலம் பிரபலமானவர் மதன் ரவிச்சந்திரன். இவர் தொடர்ந்து திமுகவினரையும், அக்கட்சித் தலைவர்களையும் மோசமாக தாக்கி வந்த நிலையில் அவருக்கு பாஜகவின் ஆதரவு வழங்கி வந்தனர். இதனால் அவர், டெல்லிக்கு சென்று பாஜக தமிழக பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு கட்சியில் பெரிய வளர்ச்சி இல்லாததால், கட்சியின் மீது மதன் ரவிச்சந்திரன் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர்  கே.டி ராகவன் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ  எனக்குரிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை அவர் நேற்று வெளியிட்டார். அது ஒட்டு மொத்த பாஜகவையும் கதி கலங்க வைத்துள்ளது. தன் மீதான பாலியல் புகாரை அடுத்து கே.டி ராகவனும் பாஜகவிலிருந்து தனது மாநிலச் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் பாஜகவில் ஒரு தரப்பினர், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த திட்டமிட்ட சதி செய்ததாக  மதன் ரவிச்சந்திரனை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்பை அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் வெளியிட்டுள்ளார். 

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பத்திரிக்கையாளர் திரு.மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.கே அண்ணாமலை EX IPS  அவர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக வீடியோ பதிவில் கருத்து தெரிவித்துள்ள திரு. மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்படுகிறார்கள். 

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது. என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மதன் வெளியிட்டுள்ள வீடியோவில் முகப்பில், இனி வரும் நாட்களில் இதேபோல இன்னும் பல  வீடியோக்கள் வெளியாகும் என அதிர்ச்சி தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

click me!