தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு ஆப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Aug 25, 2021, 3:19 PM IST
Highlights

தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளுக்குள் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதால் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால்  பள்ளி வளாகத்தை சுத்தமாக  வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம்  மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேணண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களை வெப்ப பரிசோதனைக்கு பின் வளாகத்தில் அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் மற்றும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளுக்குள் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். 

click me!