ஊழலில் புழுத்துப் போன சிவகங்கை பாம்கோ.! பூட்டை உடைத்த அந்த உயர்அதிகாரி.! கண்டுகொள்ளாத முதல்வர்.!!

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2020, 9:42 PM IST
Highlights

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால்பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் கடைகளுக்கு அனுப்பவேண்டிய பொருள்களை சிவகங்கை மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை(பாம்கோ) வெளிசந்தையில் 20லட்சம் மதிப்பிலான பொருள்களை விற்பனைசெய்ததாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த பாம்கோதொடர் சர்ச்சையில் வருகிறது.ஆனால் நடவடிக்கை மட்டும் இல்லை என்கிற குற்றச்சாட்டு  
தொடர்கிறது.

T.Balamurukan

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால்பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் கடைகளுக்கு அனுப்பவேண்டிய பொருள்களை சிவகங்கை மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை(பாம்கோ) வெளிசந்தையில் 20லட்சம் மதிப்பிலான பொருள்களை விற்பனைசெய்ததாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த பாம்கோதொடர் சர்ச்சையில் வருகிறது.ஆனால் நடவடிக்கை மட்டும் இல்லை என்கிற குற்றச்சாட்டு  
தொடர்கிறது.

இந்த ஊழல் புகார் குறித்து சிவகங்கை திமுக நகர் செயலாளர் துரை.ஆனந்த் நம்மிடம்  பேசும் போது..,
 
"வெளிமார்க்கெட்டில் அதிகவிலைக்கு உணவு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால்  குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக பாம்கோ சார்பில் கொள்முதல்  செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால் அத்தியாவசியப்  பொருள்கள் கிடைப்பது சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த குறையை  போக்குவதற்காகவும்,குறைந்த விலையில் பொருள்களை சப்ளைசெய்யவும் 'பாம்கோ'  
ரவை,கோதுமைமாவு, மைதாமாவு, சேமியா,உளுந்து இவை அனைத்தும் கொள்முதல்  செய்து வருகிறது.  விருதுநகரிலிருந்து உளுந்து ஒரு கிலோ 95 ரூபாய் வீதம் சுமார் 8லட்சத்துக்கு  கொள்முதல் செய்து அதனை 550 ரேசன் கடைக்கு அனுப்பாமல், சிவகங்கை நேரு  பஜாரில் உள்ள ஒரு பெரிய மளிகை கடைக்கு அதிக விலைக்கு விற்றுவிட்டனர்.

 புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் உள்ள வியாபாரிகளுக்கு  மைதா,ரவை,கோதுமைமாவு, சேமியா என இவை அனைத்தும் அதிகாரிகள்  திருமாவளவன்,ராமமூர்த்தி,ராமு,கண்ணன் ஆகியோர் துணையுடன் வேன் மூலம்  அனுப்பி,விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உணவு பொருட்களுக்கு உரிய பணத்தை பெற்று கொண்டு ரேசன் கடைக்கு அனுப்பியது  போல் இன்வாய்ஸ் போடப்பட்டு அதன் பிறகு கடை விற்பனையாளர் கடையில் விற்றது  போல் பில் போட்டு பணம் கட்டப்பட்டிருக்கிறது.  சிவகங்கையில் பாம்கோ கடை 1 மற்றும் 2ம் நம்பர் கடையும், காளையார் கோவில்  இரு கடைகளிலும் பொருள்கள் விற்றது போல் பணம் சிட்டாவாக கட்டப்பட்டுள்ளது.  
இதன் மதிப்பு ரூபாய்  7.50 லடசம். இதை கூடுதலாக வெளி வியாபாரிகளுக்கு விற்ற  தொகையின் மதிப்பு ரூபாய் 20 லட்சம். மக்களுக்கு சேவை செய்யும் பாம்கோ நிர்வாக  அதிகாரிகள் கல்ல சந்தையில் பொருட்களை விற்று கூடுதல் லாபம்  பார்த்திருக்கிறார்கள்.தற்போது பாம்கோ நிர்வாகம் மூலம் காய்கறி வேனில் விற்பனை  செய்து வருகின்றனர் அதற்கும் நஷ்ட கணக்கு காண்பித்து நிர்வாகத்திடம் வவுச்சர்  மூலம் பணம் கொள்ளையடித்து வருகின்றனர்.
இதற்கு முழு காரணமாக செயல்பட்டு வரும் பாம்போ நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.இந்த ஊழல் முறைகேடு குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் பேசும் போது.., 'பாம்கோ' மேலாண்மை திருமாவளவன் நேரடியாக ஊழியர்களை காரில்  ஏற்றிக்கொண்டு போய் குடோன் பூட்டை உடைத்து ரவை,மைதா,சேமியா உள்ளிட்ட  பொருள்களை தூத்துக்குடி கண்ணனுக்கு லாரியில் அனுப்பி வைத்திருக்கிறார்.  


மதுராந்தகத்தில் இருந்து 'திருப்தி பிராண்ட்' என்கிற பெயரில் அந்த பொருள்கள்  அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.அந்த பொருள்கள் அனைத்தையும்  சப்ளை செய்யும் டீலர் தான் இந்த கண்ணன்.திண்டுக்கல்,சிவகங்கையைச் சேர்ந்த பாய்  ஒருவரும் இந்த ஊழலில் உடந்தையாக இருந்திருக்கிறாராம். சிவகங்கை 'பாம்கோ'  பல்வேறு சர்ச்சைகளில் கிக்கிக்கொண்டே போகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ரேசன்அரிசியை பட்டை தீட்டி பாம்கோ கடைகளிலும்,ரேசன்கடைகளிலும் விற்பனை  செய்த சம்பவம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.அடுத்ததாக, சிவகங்கை பாம்கோ  மெயின் ஆபீசில் இருந்த விஜயா, 'கொள்முதல் செய்த பில் தொகையை  குறைத்துக்காட்டி கணக்கு எழுதி சுமார் 15லட்சம் முறைகேடு செய்தார்.அவர் மீது  இதுவரைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது".  என்கிறார்கள். 
 
பாம்கோ நிர்வாக இயக்குனர் திருமாவளவனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்." அவருடைய போன் சுவிட்ச் ஆப்  செய்யப்பட்டுள்ளது. விளக்கம் அளித்தால் அதையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.
 

click me!