டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறியாமையால் உளறுகிறார்... சிங்கப்பூருக்கு புரிய வைத்த வெளியுறவுத்துறை அமைச்சர்..!

By Thiraviaraj RMFirst Published May 19, 2021, 1:16 PM IST
Highlights

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர் கொரோனா குறித்து இந்தியாவுக்காக பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிங்கப்பூர் கொரோனா குறித்து இந்தியாவுக்காக பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , ‘’சிங்கப்பூரில் புதியவகை உருமாற்றமடைந்த கொரோனா உருவாகியிருக்கிறது. அதனால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே சிங்கப்பூருடனான விமான போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் இந்தியாவில் மூன்றாம் அலை உருவாகக் கூடும்’’என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
 
இதற்கு மறுப்பு தெரிவித்து சிங்கப்பூருக்கான இந்திய தூதர் கெஜ்ரிவாலை கடுமையாக சாடியுள்ளார். இன்று காலை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு போன் செய்து பேசிய அவர், “உருமாற்றமடைந்த கொரோனா எதுவும் சிங்கப்பூரில் கண்டறியப்படவில்லை. இந்தியாவில் உருமாற்றமடைந்த கொரோனாவால் தான் சிங்கப்பூரில் சிறுவர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உருமாற்றம் குறித்தோ விமான சேவைகள் குறித்தோ பேச கெஜ்ரிவாலுக்கு எந்தத் தகுதியும் இல்லை”என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சிங்கப்பூரும், இந்தியாவும் கைகோர்த்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறோம். இந்தியாவுக்குத் தேவையான ஆக்சிஜன் சப்ளை செய்வதில் சிங்கப்பூர் முக்கிய பங்காற்றுகிறது. இதுபோன்று இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு பேணப்படுகிறது. ஆனால், ஒருசிலரின் பொறுப்பற்ற பேச்சால் இருநாட்டு உறவில் சேதம் ஏற்படுத்துகிறது. ஆகவே சிங்கப்பூருக்கு நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவுக்காகப் பேசவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதிமேதாவித்தனமாக கெஜ்ரிவால் இப்படி பேசினால் அவமானம் தான் நேரும் தன் பொறுப்பை உணர்ந்து அவர் பேசவேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

click me!