காட்டிகொடுத்த கருணாவை தூக்க ஸ்கெட்ச் போடும் சிங்களர்கள்..!! பழிவாங்குகிறது பிரபாகரனுக்கு செய்த துரோகம்...!!

Published : Jan 18, 2020, 11:18 AM IST
காட்டிகொடுத்த கருணாவை தூக்க ஸ்கெட்ச் போடும் சிங்களர்கள்..!!  பழிவாங்குகிறது பிரபாகரனுக்கு செய்த துரோகம்...!!

சுருக்கம்

பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியுமானா  கருணா தொடர்ந்து கூறி வருகிறார் ,   

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மாத்திரமே தேசிய தலைவர் என கருணா தொடர்ச்சியாக வெளியிட்டு வரும்  கருத்துக்கு அரசாங்கத்தின் பதில் என்ன என புத்த துறவிகள் அமைப்பு ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது .  அந்த அமைப்பின் தலைவர் புதுகல  ஜீன வம்சதாரா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ,  அது சிங்கள பத்திரிக்கை ஒன்றில் செய்தியாக வெளி வந்துள்ளது ,  அதில் உள்ள விவரம் :- விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே தேசியத் தலைவர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதியுமானா  கருணா தொடர்ந்து கூறி வருகிறார் , 

பிரபாகரன் என்பவர் 30 ஆண்டுகள் இலங்கையில் யுத்தம் நடத்தி நாட்டு மக்களின் உயிர்களையும் ,  தேசிய வளத்தையும் பெருமளவில் அழித்த நபராவார் யாழ்ப்பாணத்தில் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்து தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் உட்பட முழு நாட்டு மக்களையும் மரண பயத்தில் ஆழ்த்தியவர்.  இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் உள்ள தலைவர்களையும்,  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலைக்கும்  மற்றும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிவுஜீவியான லக்ஷ்மன் கதிர்காமர் ,  முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா ,  ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க , உள்ளிட்டவர்களின்  கொலைகளுக்கு காரணமானார் ஆவார்.  

அப்படிப்பட்டவர் எப்படி இலங்கையின் தேசியத் தலைவராக இருக்க முடியும்,  மேலும் கருணா போன்ற பயங்கரவாத தகவல்கள் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடம் இது தொடர்பாக மன்னிப்புக் கோர வேண்டும் ,  கருணா ஒரு பயங்கரவாத சிந்தனை கொண்டவர் ,  தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாக்கி வருகிறார்கள் ,  மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க கடந்த அரசும் சரி, தற்போதைய அரசும் சரி அனுமதிகளை வழங்குகின்றனர். கருணா சொல்வதுபோல தொடர்ந்து பிரபாகரனை தேசியத் தலைவராக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்,  முழு நாட்டு மக்களுக்கும் தன்னுடைய நிலைபாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அந்த அமைப்பு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!