திமுகவில் இருந்து அதிரடியாக வெளியேறும் பெண் விஐபி !! நொந்து நூலான ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Apr 1, 2019, 11:18 PM IST
Highlights

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மறைந்து முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்து சோழன், அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

தி.மு.க ஆட்சியில் பெண் அமைச்சராகவும், திமுக முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான சற்குண பாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். 

திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குணப்பாண்டியன் ஆர்.கே நகர் தொகுதியில் பலமுறை அதிமுகவை தோற்கடித்தவர். சற்குணப்பாண்டியன் மரணமடைந்த பிறகு அவரது இடத்தில் அவரது மருமகள் சிம்லா முத்துச்சோழன், ஜெயலலிதாவை ஏதிர்த்து 2016 தேர்தலில் ஆர் கே நகரில் வேட்பாளராக போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் சிம்லா முத்துச்சோழன் தோல்வி அடைந்தார். அவர் ஜெயலலிதாவிடம் 30 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் தேர்வி அடைந்தார்..

தற்போழ மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில்  போட்டியிட  அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.  கண்டிப்பாக தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவ்ர் எதிர்பார்த்திருந்த நிலையில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதியை திமுக வேட்பாளராக அறிவித்தது. 

இது சிம்லா முத்துச்சோழனுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தேர்தல் பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை, அந்த பதவியை மருது கணேஷுக்கு வழங்கப்பட்டது. 

இதையடுத்து சிம்லா முத்துசோழன் திமுகவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் சமயத்தில் அவர் திமுகவை விட்டு வெளியேறினார் அது கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் நினைப்பதால் அவர் சங்கடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 

click me!